மத்திய வங்கி ஆளுநரை பதவி நீக்க அரசு சதித்திட்டம் - சபையில் அம்பலப்படுத்தினார் சஜித்

Published By: Digital Desk 5

02 Sep, 2022 | 01:53 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)

மத்திய வங்கியின் ஆளுநர் இரட்டை பிரஜா உரிமை கொண்டவர் என்று குற்றம் சாட்டி, தங்களின் நண்பர் ஒருவரை மத்திய வங்கியின் ஆளுநராக்கும் சதி நாடகமொன்றை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. இதனை அரசாங்கம் மறுக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (02) விசேட கூற்றொன்றை முன்வைத்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டின் சமகால பொருளாதார நிலைமை மற்றும் அதனை முன்நோக்கி  கொண்டுசெல்வது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் உரை ஒன்றை  மத்திய வங்கி ஆளுநர் கடந்த புதன் கிழமை பாராளுமன்ற வளாகத்தில் மேற்கொண்டிருந்தார். 

இது சிறந்த நடவடிக்கை. நாட்டின் பொருளாதார பயணம் தொடர்பில் குறைந்தபட்ச தெளிவையாவது பாராளுமன்ற உறுப்பினர்கள் புரிந்துகொள்ளவேண்டும். 

என்றாலும் அந்த நிகழ்வில் ஆளும் தரப்பின் சில உறுப்பினர்கள்  நடந்துகொண்டவிதம், ஆளுநரை குற்றம் சாட்டும் வகையில் தெரிவித்த கருத்துக்கள் மிகவும் கவலைக்குரியதாகும். மத்திய வங்கி ஆளுநர் இந்த பதவியை தேடி வரவில்லை. 

அவுஸ்திரேலியாவில் இருந்த அவரை கோத்தாபய ராஜபக்ஷ்வே அழைத்து, இந்த பதவிக்கு அவர்தான் பொருத்தமானவர் என இந்த பதவியை அவருக்கு வழங்கினார். அந்த தீர்மானம் மிகவும் சரியானது.

என்றாலும் குறித்த நிகழ்வின்போது ஒருசில உறுப்பினர்களை பயன்படுத்தி, ஆளுநர் இரட்டை பிரஜா உரிமை உடையவர் என பல்வேறு குற்றச்சாட்டுக்களை அவருக்கு தெரிவித்தார்கள். இது மிகவும் தவறான  நடவடிக்கை. 

அதனுடன் முடியாமல் சபையிலும் ஆளும் தரப்பு உறுப்பினர் ஒருவர் உரையாற்றுகையில், நாடு வங்குரோத்து அடைவதற்கு மத்திய வங்கி ஆளுநர்தான் காரணம் என்பதுபோலான கருத்தை மறை முகமாக தெரிவித்தார்.

அத்துடன் அரசாங்கம் சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் கூறு கின்றது. அதற்கு முன்னர் மத்திய வங்கி ஆளுநருடன் இணக்கப்பாட்டுடன் செயற்பட ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும். 

இந்த நடவடிக்கைகளை , அர்ப்பணிப்புடன் செயற்படவந்த நபரை, நீக்கிவிட்டு, தங்களின் நண்பர் ஒருவரை மத்திய வங்கி ஆளுநர் பதவிக்கு நியமிப்பதற்கான சதித்திட்டமாகும். 

அரசாங்கத்தின் இவ்வாறான நாடகங்களால்தான் எமக்கு சர்வகட்சி தொடர்பில் சந்திக்கக்கூட முடியாமல் இருக்கின்றது.

அத்துடன் மத்திய வங்கிய ஆளுநர் கலந்துகொண்ட நிகழ்வில் எமது கட்சி உறுப்பினர்களான ஹர்ஷடி சில்வா, லக்ஷ்மன் கிரியெல்ல போன்றவர்கள் முக்கியமான சில கேள்விகளை கேட்டபோது, ஆளும் தரப்பு உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்வகையில் மிகவும் கீழ்த்தரமான முறையில் செயற்பட்டனர்.

மத்திய வங்கி அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினர்ள் தொடர்பில் எந்தளவுக்கு கணிப்பிட்டிருப்பார்கள். இவர்களால் சட்டம் இயற்றும் இடத்தில் இருக்கின்றார்கள் என நினைக்கும் வகையிலேயே அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர். இவர்களின் நடவடிக்கையை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஹர்ஷடிசில்வா அந்த சபையில் இருந்து எழுந்து சென்றார்.

எனவே மத்திய வங்கி ஆளுநரை அந்த பதவியில் இருந்து நீக்கும் சதித்திட்டத்தை அரசாங்கம் மேற்கொண்டுவருகின்றது. அதனை அரசாங்கம் மறுக்க முடியாது. 

அதனால் மத்திய வங்கி ஆளுநர் விடயத்தில் ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். அத்துடன் கோப், கோபா குழுக்களின் தலைமை பதவி எதிர்க்கட்சிக்கு வழங்குவதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது அதுதொடர்பில் எந்த நடவடிக்கையும் இலலாமல் செயற்பட்டு வருகின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51