மிகவும் பிரபலமான வங்கி மற்றும் நிதி இணையத்தளமாக தேசிய சேமிப்பு வங்கி (NSB ) தெரிவு

By Vishnu

02 Sep, 2022 | 01:00 PM
image

LK Domain Registry ஏற்பாடு செய்திருந்த BestWeb.lk விருது வழங்கும் விழா கடந்த 2022 ஆகஸ்ட் 30 அன்று கொழும்பு சினமன் க்ரேன்டில் நடைபெற்றபோது NSB இன் உத்தியோகப்பூர்வ இணையதளம் (www.nsb.lk) சிறந்த வங்கி மற்றும் நிதி இணையதளத்திற்கான அதியுயர் விருதுடன் பிரபலமான வங்கி மற்றும் நிதி இணையதளம் என்ற விருதையும் வென்றது. 

www.nsb.lk  ஆனது அதன் சிறந்த செயல்திறனுக்காக தொடர்ச்சியாக அங்கீகரிக்கப்பட்டு பல வெகுமதிகளை வென்றுள்ளது. மேலும் தொடர்ந்து இரண்டாவது வருடமாக இவ்வருடமும் மிகவும் பிரபலமான வங்கி மற்றும் நிதி இணையத்தளமாக NSB தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இவ் இணையதளம் 2020 இல் இலங்கையின் சிறந்த இணையதளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இவ் விருதை NSB இன் தலைவர் திருமதி கேசிலா ஜெயவர்தன, NSB இன் GM/CEO-திரு. அஜித் பீரிஸ், இயக்குநர்கள்- திரு. ஜெயந்த பெரேரா, திரு. லக்ஷ்மன் காமினி மற்றும் சிரேஷ்ட DGM - திரு. மு. ரவீந்திரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட NSB இன் நிர்வாக உறுப்பினர்கள் அனைவரும் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த விருதை NSB இன் தலைவி திருமதி கேசிலா ஜெயவர்தன மற்றும் NSB இன் GM/CEO-திரு. அஜித் பீரிஸ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

திரு. லால் கருணாதிலக்க  DGM  (சந்தைப்படுத்தல் மற்றும் மீளெடுப்புகள்) மற்றும் மிகவும் பிரபலமான இணைய விருது மற்றும் தகுதிச் சான்றிதழுடன் குழு

NSB இன் தலைவி திருமதி கேசிலா ஜெயவர்தன, NSB இன் GM/CEO-திரு. அஜித் பீரிஸ், இயக்குநர்கள்- திரு. ஜயந்த பெரேரா, திரு. லக்ஷ்மன் காமினி மற்றும் சிரேஷ்ட DGM - திரு. மு. ரவீந்திரன் மற்றும் NSB இன் நிறுவன நிர்வாகத்தின் உறுப்பினர்கள் விருதுடன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோடிபதி பரிசுப்பொதியினை கொண்டுவரும் “கப்ருக” லொத்தரின்...

2022-09-26 15:47:17
news-image

”Smart Home’’ஐ அறிமுகம் செய்து உங்கள்...

2022-09-15 22:41:37
news-image

மிகவும் பிரபலமான வங்கி மற்றும் நிதி...

2022-09-02 13:00:40
news-image

இலங்கையில் ஆயிரம் குடும்பங்களுக்கு உணவளிக்க கைகோர்த்த...

2022-09-02 10:08:36
news-image

குணநலம் மிக்க வாழ்க்கையின் புதிய பயணத்திற்காக...

2022-09-01 13:57:33
news-image

தொலைக்காட்சி பாவனையாளர்களுக்கு தனித்துவமான அனுபவத்தை வழங்கும்...

2022-08-23 21:56:55
news-image

தேசிய Fuel Pass தளத்தை நடைமுறைப்படுத்த...

2022-08-24 16:19:12
news-image

செலான் வங்கி ஹேலீஸ் சோலருடன் கைகோர்த்து...

2022-08-22 20:53:25
news-image

2022 முதல் அரையாண்டில் நிலையான வருமான...

2022-08-16 12:13:13
news-image

வன்முறைக்கு எதிராக சிறுவர்களைப் பாதுகாக்க !...

2022-08-16 10:00:25
news-image

ISO தரச் சான்றிதழைப் பெற்றது பிரியந்த...

2022-08-08 13:16:57
news-image

LOLC நடைமுறைப்படுத்தும் 500 மில்லியன் ரூபாய்...

2022-07-26 14:54:18