டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை என்றால் என்ன?

By T. Saranya

02 Sep, 2022 | 11:58 AM
image

டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை என்பது அந்தரங்க உறுப்பில் சம்மந்தப்பட்டவரின் அனுமதியின்றி கை மற்றும் கால் விரல்களை நுழைப்பது. 

ஆங்கிலத்துல் டிஜிட் என்பது விரல்களை குறிக்கிறது. எனவே இந்த குற்றத்துக்கு 2012-ம் ஆண்டு முதல் `டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை’ எனப் பெயரிப்பட்டிருக்கிறது. 

இந்தியாவில்  டெல்லியில் நிர்பயா கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு பிறகு இந்தியாவில் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டன.

அதில் ஒன்றுதான் 'டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை'யும் குற்றம் என்ற சட்டம். இந்தச் சட்டம் IPC பிரிவு 375 (பாலியல் வன்கொடுமை) மற்றும் பாலியல் குற்றத்திலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (POCSO) ஆகிய சட்டத்தின் கீழ் பாலியல் குற்றமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டம் இயற்றப்படுவதற்கு முன் இது போன்ற குற்றம் ஒரு மானபங்கச் செயலாக பார்க்கப்பட்டதே தவிர, பாலியல் வன்கொடுமை என்ற சட்டப்பூர்வ வரம்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right