இயக்குநரும், நடிகரும், தயாரிப்பாளருமான கே. எஸ். ரவிக்குமார் தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'ஹிட் லிஸ்ட் 'என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த படத்தின் மூலம் இயக்குநர் விக்ரமனின் மகனான விஜய் கனிஷ்கா கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
அறிமுக இயக்குநர்கள் சூரியக்கதிர் மற்றும் கார்த்திகேயன் இயக்கத்தில் தயாராகும் முதல் படைப்பு 'ஹிட் லிஸ்ட்'.
இதில் தமிழ் திரையுலகின் மண் மணம் கமழும் படைப்புகளையும், அறம் சார்ந்த படைப்புகளையும் உருவாக்கி தனித்துவமான படைப்பாளி என்ற அடையாளத்தை பெற்றிருக்கும் விக்ரமனின் வாரிசான விஜய் கனிஷ்கா கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
இவருடன் மூத்த நடிகர்களின் ஒருவரான சரத்குமார் அழுத்தமான வேடத்தில் நடிக்கிறார். இதற்கான தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது தமிழ் திரையுலகில் முத்திரை பதித்த படைப்பாளிகள் பலரும் பங்கு பற்றி விஜய் கனிஷ்காவிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.
எக்சன் திரில்லர் ஜேனரில் தயாராகவிருக்கும் 'ஹிட் லிஸ்ட் ' படத்தில் பணியாற்றும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விழாவை தொடர்ந்து 'ஹிட் லிஸ்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இதனை நடிகர் தனுஷ் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டார்.
'தெனாலி', 'கூகுள் குட்டப்பா' ஆகிய படங்களை தொடர்ந்து கே. எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகும் ' 'ஹிட் லிஸ்ட்' படம், முதலில் பட மாளிகையில் வெளியாகும் என்றும், அதன் பிறகு பிரபலமான டிஜிட்டல் தளத்தில் வெளியிடப்படும் என்றும் திரையுலக வணிகர்கள் தெரிவிக்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM