(எம்.எம்.சில்வெஸ்டர்)
எரிபொருள், எரிவாயு மற்றும் விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குமாறு ஜனாதிபதி அலுவலக பிரதானி , தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேற்படி துறைகளை சேர்ந்த அதிகாரிகளுடன் 01 ஆம் திகதி வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
எரிபொருள் கொள்வனவு மற்றும் விநியோகம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகளுடன் கலந்துரையாடிய சாகல ரத்நாயக்க, எரிபொருள் நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறும் ஆலோசனை வழங்கியிருந்தார்.
மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு தொடர்பிலான பிரச்சினை குறித்தும் இந்த கலந்துரையாடலின்போது அதிக கவனம் செலுத்தப்பட்டது. மண்ணெண்ணெய் விலை அதிகரிப்புக்கு பிரச்சினைக்கும் தீர்வு காண்பதற்கு முன்னுரிமை வழங்குமாறும் அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.
நெல் கொள்முதல் செய்வதில் நெல் சந்தைப்படுத்தல் சபை எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர்கள் மற்றும் அரச வங்கிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடப்பட்டது. நெல் கொள்வனவுகளை துரிதப்படுத்துமாறும் நெல் சேமிப்பு வசதிகளை மேம்படுத்துமாறும் சாகல ரத்னாயக்க இதன் போது அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
தற்போதைய எரிவாயு நெருக்கடி குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், எரிவாயு கொள்வனவு, இறக்குமதி மற்றும் விநியோகம் தொடர்பில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்வுகள் எடுக்கப்பட்டன.
இந்த கலந்துரையாடலுக்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் பொருளாதார அலுவல்கள் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ஆர்.எச்.எஸ்.சமரதுங்க உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM