இலங்­கை­யில் திரு­மண வய­தெல்லை 18 ஆக இருக்­கின்­ற­போது, முஸ்லிம் தனியார் சட்ட செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்துச் செல்­வதில் விவாகம் செய்­வ­தற்­கான வய­தெல்­லையை 16 வரை­யா­வது கொண்டு வர வேண்­டு­மென்ற விட­யத்தில் சில முரண்­பா­டு­க­ளுக்கு மத்­தி­யிலும் உடன்­பாடு காணப்­பட்­டாலும்  இவ்­வி­ட­யத்தில் பிடி­வா­த­மாக இருப்­பதில் எனக்கும் கூட உடன்­பா­டில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

கல்­முனை மஹ்மூத் மகளிர் உயர் பாட­சா­லையின் முன்னாள் அதிபர் ஏ.ஆர்.ஏ. பசீரை பாராட்டிக் கௌர­விக்கும் நிகழ்வு நேற்று திங்­கட்­கி­ழமை நடை­பெற்­றது, நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு கூறினார்.

அமைச்சர் தொடர்ந்து உரை­யாற்­று­கை யில்,

திரு­மண வய­தெல்லை விட­யத்தில் சற்று நெகிழ்வுத் தன்­மை­யயைப் பேண வேண்­டி­யுள்­ளது, குறிப்­பாக மருத்­துவ ரீதி­யா­கவும் உட­லியல் ரீதி­யா­கவும் குறைந்த வயதுத் திரு­மணம் பாதிப்­புக்­களை கொண்­ட­மைந்­துள்ள நிலையில் குழந்தைப் பரா­ம­ரிப்பு, குழந்தை பெறு­வ­தற்­கான தயார் நிலை என்­பன போன்ற விட­யங்­களில் உள்ள அடிப்­ப­டை­களை வைத்து இவற்றைக் கூறி­னாலும் பாரிய விப­ரீ­தங்­களை எதிர்­நோக்கிக் கொண்­டி­ருக்­கின்றோம்.

இதில் நெகிழ்வுத் தன்­மை­யுடன் அர­சி­யல்­வா­தி­களும் உல­மாக்­களும் சட்ட வல்­லு­நர்­க­ளு­மாகச் சேர்ந்து ஒரு இணக்கத் தீர்வை எட்டிக் கொண்­டி­ருக்­கின்ற சந்­தர்ப்­பத்­தில்தான் இப்­பொ­ழுது நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கின்ற அமைச்­ச­ரவை உப குழுவை காட்டி, அதை ஜீ.எஸ்.பி. சலுகை பெறப்­போ­கின்றோம் என்று ஒரு அமைச்சர் சொன்­னதை வைத்து சில குழுக்கள் ஆர்ப்­பாட்­டங்­களை செய்யத் தொடங்­கி­யி­ருக்­கின்­றன.

இதற்­கெல்லாம் பிர­தான காரணம் இதற்­கென்று நிய­மிக்­கப்பட்ட குழு கிட்­டத்­தட்ட ஏழெட்டு வரு­டங்­க­ளாக இவ்­வி­ட­யத்தை இழுத்­த­டித்­த­துதான். நான் நீதி அமைச்­ச­ராக இருக்­கின்­ற­போது பல தட­வைகள் குழு­வுக்குப் பொறுப்­பா­ன­வர்­களை, என்­னு­டைய காலப்­ப­கு­திக்குள் இதனை செய்து முடித்­து­வி­டுங்கள் என்று கேட்டும் நடக்­காமல், இன்னும் முடி­யாமல் இருக்­கின்ற நிலை­யில்தான், ஒரு சில விட­யங்­க­ளுக்­காக இது இழுத்­த­டிப்புச் செய்­யப்­பட்­டது. செய்து முடித்த விட­யங்­க­ளை­யா­வது திருத்தம் செய்­தி­ருந்தால் நிறை­வ­டைந்­தி­ருக்கும். 

உடன்­பாடு கண்ட விட­யங்­க­ளைக்­கூட நாங்கள் முடி­வுக்குக் கொண்டு வராமல் சின்னச் சின்ன விவ­கா­ரங்­க­ளுக்கு, உதா­ர­ணத்­திற்கு 16 வயதை திரு­மண வய­தெல்­லை­யாக நாங்கள் ஏற்றுக் கொள்­ளலாம் என்று இணக்­கப்­பாடு வந்­த­பி­றகு அதற்குக் குறை­வா­கவும் வழங்க வேண்­டு­மென்று பிடி­வா­த­மாக இருப்­பது எனக்கும் கூட உடன்­பா­டில்லை

இப்­ப­டி­யான விட­யங்­களில் பிடி­வாதத் தன்மை காட்­டு­வது முழு சமூ­கத்­தை­யுமே ஆணா­திக்­க­வாத சமூ­க­மாக, பெண் அடக்கு முறை­யா­ளர்­க­ளாக பார்க்க வைக்­கின்ற துர்ப்­பாக்­கிய நிலையை கொண்டு வந்­தி­ருக்­கி­றது என்­பதை தெளி­வாகக் கூறிக்­கொள்­கின்றேன்.

எனவே இது குறித்து ஆராய்ந்து கொண்­டி­ருக்­கின்ற இக்­குழு இன்னும் தாம­திக்­காமல் இந்த திருத்­தங்­களை சிபாரிசு செய்­ய­வேண்­டு­மென்று மிக அடக்­க­மாக வேண்­டிக்­கொள்ள விரும்­பு­கின்றேன். இங்­கி­ருக்­கின்ற உல­மாக்கள் என்­னோடு கோபித்துக் கொள்­மாட்­டார்கள். ஏனென்றால் இது தொடர்­பாக அவர்­க­ளுடன் பல தட­வைகள் பேசி­யி­ருக்­கின்றேன். 

காதி நீதி­மன்ற செயற்­பா­டு­க­ளிலும் பெண்­க­ளுக்­கான பங்கு என்ற விட­யத்தில் மிகுந்த தாராளத் தன்­மை­யோடு உல­மாக்கள் விட்­டுக்­கொ­டுப்­புடன் முன்­வர வேண்டும்.  இவ்­வா­றான விட­யங்­களை பகி­ரங்­க­மாகப் பேசக்­கூ­டா­தென்று இருந்­தாலும் அழுத்­தங்கள் கூடு­த­லாக இருப்­பதால், அவ்­வா­றான அழுத்­தங்­க­ளிலே சில நியா­யப்­பா­டுகள் இருப்­பதைக் காணு­கின்­ற­போது, பல வரு­டங்­க­ளாக இது தேவை­யில்­லாமல் இழுத்­த­டிப்புச் செய்­யப்­ப­டு­கின்­றது, என்­கின்­ற­போது இவ்­வி­ட­யங்கள் பூதாகர­ மா­வ­தற்கு நாங்­களே வழி­யெ­டுத்துக் கொடுத்­து­விட்டோம் என்­றா­கி­விட்­டது. 

சில இயக்­கங்கள், குழுக்கள் எடுத்­ததற்­ கெல்லாம் ஆர்ப்­பாட்­டங்கள் மேற்கொள் ­கின்­றன. வீதி­யில் பேசு­கின்ற வார்த் தை­ களும் மற்­ற­வர்கள் எங்­களை அவ­ம­திப்­பதும்  இழி­வு­ப­டுத்­து­மாக இருக்­கின்ற நிலை­யாக மாறி­யி­ருக்­கின்­றது. நபி (ஸல்) உச்­சக்­கட்ட பொறுமை காத்து, விட்டுக் கொடுத்து அவ­ம­திப்­புக்­க­ளையும் அவ­தூ­று­க­ளையும் தாங்கிக் கொண்­டி­ரா­விட்டால் இஸ்லாம் உலகில் வளர்ந்­தி­ருக்­காது. 

ஆனால், இன்று பொறு­மை­யி­ழந்து தடி­யெ­டுத்­த­வர்­க­ளெல்லாம் வேட்­டைக்­கா­ரர்­க­ளாகி எல்லா விவ­கா­ரங்­க­ளுக்கும் ஆர்ப்­பாட்­டங்கள் செய்து மற்ற சமூ­கங்­களை அவ­ம­திக்­கின்ற பாங்­கில் பேசு­கின்ற குழுக்­களை நாம் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டுவர வேண்டும். 

எங்களது பெண்கள் அரசியலுக்கு வருவதை உலமாக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதை நாங்கள் உருவாக்க வேண்டிய அவசியம் இருக் கின்றது. உள்ளூராட்சி மன்றங்களிலே 25 சதவீத பெண் உறுப்புரிமையை வழங்கி அவர்களை அரசியலுக்குள் கொண்டுவர வேண்டும். முஸ்லிம் நாடுகளில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச் சர்கள் என்று இருக்கின்ற நிலையில், ஆற்றலும் ஆளுமையும் உள்ள பெண் களை அரசியலுக்கும் தயார்படுத்த வேண் டும் என்பதை தெளிவாகச் சொல்ல விரும் புகின்றேன் என்றார்.