இலங்கையில் ஆயிரம் குடும்பங்களுக்கு உணவளிக்க கைகோர்த்த Binance Charity

By Vishnu

02 Sep, 2022 | 10:08 AM
image

Binance Charity ஆனது, முதன்முதலில் சங்கிலித் தொடராக இயங்கும் வெளிப்படைத்தன்மை கொண்ட நன்கொடை தளமாகும்.

இது நாட்டின் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 1,000 இற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உணவுப் பொதிகளை வழங்குவதற்காக உள்ளூர் 'Binance Angel' உடன் கைகோர்த்துள்ளது. இலங்கையில் அண்மைக்காலமாக நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

20,000 BUSD கிரிப்டோ நாணய நன்கொடை மூலம், கண்டி மாவட்டத்தில் உள்ள 3 நகரங்களில் உள்ள 30 இற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அரிசி, சீனி, கருவாடு, பருப்பு, நூடுல்ஸ் போன்ற அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக பயன்படுத்தப்பட்டது.

இது தொடர்பில் Binance நிறைவேற்று உப தலைவரும், Binance Charity யின் தலைவருமான Helen Hai கருத்துத் தெரிவிக்கையில், "இலங்கை மக்கள் கடந்த சில வருடங்களாக கொவிட் தொற்றுநோய் தொடர்பில் கடினமான சில வருடங்களை கடந்துள்ளனர்.

இது சுற்றுலாத் துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, அது தற்போது பொருளாதார சரிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த அவசியமான உணவு விநியோக நடவடிக்கை திட்டத்தை முன்னெடுத்துள்ளதன் மூலம், இஷார ஒரு Binance Angel எனும் அர்த்தத்தை உறுதி செய்துள்ளார்.

இந்த உலகத்தில் உணவளிக்க போதுமான உணவு உள்ளது என்பதை தெரிந்துள்ள நிலையிலும், 2022 ஆம் ஆண்டிலும் மக்கள் இன்னும் பசியுடன் இருப்பதை ஏற்றுக்கொள்வது கடினமாக உள்ளது. பசியை முடிவுக்குக் கொண்டுவருவதில் நாம் சிறப்பான வகையில் செயற்பட வேண்டும்." என்றார்.

Binance Angel திட்டம், அனைவருக்கும் சிறந்த கிரிப்டோ அனுபவத்தை உருவாக்குவதற்கான பரந்த குறிக்கோளுடன் ஆர்வத்துடனும் அக்கறையுடனுமான சமூகத்தை உருவாக்குபவர்களின் உலகளாவிய வலையமைப்பை கொண்டுள்ளது.

இலங்கையில் செயற்பாட்டில் உள்ள சுமார் 300,000 கிரிப்டோ பயனர்கள் உள்ளனர். தற்போதைய நெருக்கடியான நிலையில், இலங்கையின் ‘Binance Angel’ களில் ஒருவர், இவ்விடயங்களைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு மிகவும் பாதிக்கப்படக்கூடிய சில சமூகங்களுக்கு தற்போது அவசியமான உணவு விநியோகத்தை மேற்கொள்ள முடிவு செய்தார்.

இலங்கை Binance Angel இஷார அபேசிங்க இது தொடர்பில் தெரிவிக்கையில், “ஒரு Binance Angel எனும் வகையில், கிரிப்டோ சமூகத்தை கட்டியெழுப்புவதற்கும் நான் வாழ்கின்ற சமூகத்தை ஆதரிப்பதற்குமான பொறுப்பை நான் உணர்கிறேன்.

Binance Charity மற்றும் Binance ஆகியன அதன் உறுப்பினர்களான Angel களுக்கு இந்த திட்டம் தொடர்பில் ஆதரவளிக்க முன்வந்தமை தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நிலவும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் நிச்சயமாக இது ஒரு பாரிய படியாகும்." என்றார்.

சிறு குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள், கர்ப்பிணிப் பெண்கள், ஊனமுற்றோர், முதியவர்கள் ஆகியோர் இந்த உலர் உணவுப் பொதிகளைப் பெற்றுக் கொண்டவர்களில் உள்ளடங்குகின்றனர்.

நைஜீரியா, மொரோக்கோ, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இத்திட்டங்களை மேற்கொண்ட Binance Charity யின் தற்போதைய முயற்சியான Fight Hunger Worldwide (உலக பசிக்கு எதிரான போராட்டம்) எனும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நன்கொடை வழங்கப்படுகிறது.

இன்றுவரை, ஆதரவற்ற சூழ்நிலையில் உள்ள சுமார் 20,000 பேருக்கு உணவு விநியோகிக்க 100,000 டொலருக்கும் அதிகமான தொகை திரட்டப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் COVID-19 தொற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர்.

மேலதிக தகவலுக்கு, தொடர்பு கொள்ளவும்: media@binance.charity 

Binance Charity பற்றி

Binance Charity ஆனது உலகளாவிய நிலைபேறான வளர்ச்சியை அடைவதற்காக சங்கிலி வலையமைப்பு மூலம் இயங்கும் சமூகநலன் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும். Binance Charity ஆனது சங்கிலித் தொடர் அடிப்படையிலான 100% வெளிப்படைத் தன்மை கொண்ட நன்கொடை தளத்தை உருவாக்குவதன் மூலம் சமூக நலனை கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்ட எதிர்காலத்தை உருவாக்க, அனைத்து வகையான வறுமை மற்றும் சமத்துவமின்மைக்கு முடிவு கட்டவும், நிலைபேறான வளர்ச்சியை ஏற்படுத்தவும், யாரும் பின்தங்கியிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தவுமான செயற்பாடுகளை மேற்கொள்ள தொழில்நுட்ப புத்தாக்க கண்டுபிடிப்புகளை பயன்படுத்துகின்றது. இன்றுவரை, Binance Charity பல்வேறு திட்டங்களின் மூலம் 2 மில்லியன் பயனாளிகளுக்கு ஆதரவளித்துள்ளது. மேலதி தகவலுக்கு : https://www.binance.charity/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோடிபதி பரிசுப்பொதியினை கொண்டுவரும் “கப்ருக” லொத்தரின்...

2022-09-26 15:47:17
news-image

”Smart Home’’ஐ அறிமுகம் செய்து உங்கள்...

2022-09-15 22:41:37
news-image

மிகவும் பிரபலமான வங்கி மற்றும் நிதி...

2022-09-02 13:00:40
news-image

இலங்கையில் ஆயிரம் குடும்பங்களுக்கு உணவளிக்க கைகோர்த்த...

2022-09-02 10:08:36
news-image

குணநலம் மிக்க வாழ்க்கையின் புதிய பயணத்திற்காக...

2022-09-01 13:57:33
news-image

தொலைக்காட்சி பாவனையாளர்களுக்கு தனித்துவமான அனுபவத்தை வழங்கும்...

2022-08-23 21:56:55
news-image

தேசிய Fuel Pass தளத்தை நடைமுறைப்படுத்த...

2022-08-24 16:19:12
news-image

செலான் வங்கி ஹேலீஸ் சோலருடன் கைகோர்த்து...

2022-08-22 20:53:25
news-image

2022 முதல் அரையாண்டில் நிலையான வருமான...

2022-08-16 12:13:13
news-image

வன்முறைக்கு எதிராக சிறுவர்களைப் பாதுகாக்க !...

2022-08-16 10:00:25
news-image

ISO தரச் சான்றிதழைப் பெற்றது பிரியந்த...

2022-08-08 13:16:57
news-image

LOLC நடைமுறைப்படுத்தும் 500 மில்லியன் ரூபாய்...

2022-07-26 14:54:18