கோட்டாவுக்கு நாமலின் வீட்டுக்கு அருகே பாதுகாப்பான வீடு !

Published By: Digital Desk 5

02 Sep, 2022 | 10:16 AM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

மக்கள் போராட்டத்தை தொடர்ந்து,  நாட்டிலிருந்து தப்பிச் சென்ற பின்னர்  பதவி துறந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை 3 ஆம் திகதி மீள நாடு திரும்பவுள்ளதாக அவருக்கு மிக நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை பிரகாரம் இதற்கான ஏற்பாடுகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்படுத்திக்கொடுத்துள்ளார்.  அதன் பிரகாரமே அவர் இவ்வாறு நாடு திரும்பவுள்ளதாக அறிய முடிகின்ரது.

அவ்வாறு  முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பினால், அவருக்கு கொழும்பு 7, பெளத்தலோக்க மாவத்தை மற்றும் மலலசேகர மாவத்தை ஆகியவற்றுக்கு அருகே அமைந்துள்ள அரச வீடொன்றினை வழங்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.

தற்போது முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வசிக்கும் வீட்டுக்கு அருகே இந்த வீடு வழங்கப்ப்டவுள்ளதாக அறிய முடிகின்றது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாடு திரும்பி தனது மிரிஹானை இல்லத்தில் வாழ விரும்பினாலும், அவரது பாதுகாப்பை கருத்திற்கொண்டு, முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு வழங்க வேண்டிய  வரப்பிரசாதம் என்ற அடிப்படையில் இந்த வீட்டை வழங்க அரசாங்கம் ஆலோசித்துள்ளதாக அறிய முடிகிறது.

கடந்த ஜூலை 9 ஆம் திகதி மக்கள் போராட்டத்தைஅ டுத்து கோட்டாபய ராஜபக்ஷ முதலில் மாலை தீவுக்கு தப்பிச் சென்ற நிலையில், பின்னர் அங்கிருந்து சிங்கப் பூருக்கு சென்றிருந்தார். சிங்கப் பூரிலிருந்து தாய்லாந்து சென்ற அவர், அங்கிருந்தே நாடு திரும்பவுள்ளதாக அறிய முடிகின்றது.

முன்னதாக கடந்த ஆகஸ்ட் 23 ஆம் திகதி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பாதுகாப்பாக நாடு திரும்ப தேவையான நடவடிக்கைகளை அவருக்கு செய்துகொடுக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பரிந்துரை செய்துள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க, ஆணையாளர் கலாநிதி நிமல் கருணாசிறி ஆகியோரின் கையொப்பங்களுடன் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பரிந்துரை கடிதத்தில் இந்த விடயம்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

' முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு சட்ட ரீதியாக கிடைக்கும் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் உறுதியளிக்கும் வரை கோட்டாபய ராஜபக்ஸவினால் நாடுகு  திரும்ப முடியாமற்போயுள்ளதாக, முறைப்பாடு  ஆணைக் குழுவுக்கு கிடைத்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய அச்சுறுத்தல்கள் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு சட்ட ரீதியில் கிடைக்க வேண்டிய பாதுகாப்பை வழங்கி அவர் நாடு திரும்புவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். .

முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு சட்ட ரீதியாக வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமைகள் மற்றும் வசதிகள் கோட்டாபய ராஜபக்ஸவிற்கும் கிடைக்க வேண்டும்.

எந்தவொரு பிரஜையும் மீண்டும் தமது சொந்த நாட்டிற்கு திரும்புவதற்காக அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அது கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் பொருந்தும்.' என மனித உரிமைகள் ஆணைக்குழு, ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தாயுடன் உறங்கிக்கொண்டிருந்த ஒன்றரை மாதக் குழந்தை...

2025-02-18 18:10:00
news-image

தானம் செய்யும் பரோபகார சிந்தனை நாட்டின்...

2025-02-18 17:58:45
news-image

கொத்து, பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுப்...

2025-02-18 17:32:53
news-image

மது போதையில் அரச பாடசாலைக்குள் சென்ற...

2025-02-18 17:34:06
news-image

மின்சார சபையால் திடீர் மின்தடையை தடுப்பதற்கான...

2025-02-18 17:21:24
news-image

யாழில் டிப்பர் மோதி ஆணொருவர் பலி!

2025-02-18 17:19:54
news-image

காலச் சூழலுக்கேற்ப அரசியல் களம் மாறவேண்டியது...

2025-02-18 16:57:24
news-image

'சுத்தமான இலங்கை' திட்டத்தின் பயிற்சியாளர்களைப் பயிற்றுவிப்பதற்கான...

2025-02-18 17:30:11
news-image

வரட்சியான வானிலை ; நீர் விநியோகத்தில்...

2025-02-18 17:31:34
news-image

ஹோமாகம வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பினால்...

2025-02-18 17:22:49
news-image

அநுராதபுரத்தில் ஆறு துப்பாக்கிகளுடன் இருவர் கைது

2025-02-18 15:51:52
news-image

யாழ். மாவட்ட வீதிகளின் முழு விபரங்களும்...

2025-02-18 17:18:39