கன்­னியா  காட்­டுப்­ப­கு­தியில் புதையல் இருப்­பதை அறிந்தேன், அதனை பெற்­றுக்­கொள்­வ­தாற்­காக எனது இரு பிள்­ளை­க­ளையும் பலி கொடுக்க வேண்டும் என எனது மனை­வி­யிடம் கூறினேன், அப்போது கத­வு­களும் மூடப்­பட்­டி­ருந்­தன, விட­யத்தை மனை­வி­யிடம்கூறி கேட்­ட ­போது மனைவி அதனை ஏற்­றுக்­கொள்­ள­வி­லலை, இதனால் எமக்­கி­­டையில் வாக்கு வாதம் ஏற்­பட்­டது,  அதன் பின்னர் என்ன நடந்­தது என்­பது எனக்குத் தெரி­யாது என   இரண்டு பிள்­ளை­க­ளையும் மனை­வி­யையும் வெட்­டிக்­கொன்ற கொலை சந்­தேக நப­ரான ராஜ­லஷ்மன்  பொலிஸ் வாக்கு மூலத்தில் தெரி­வித்­துள்ளார்.

கிளிக்­குஞ்சு மலை பிர­தே­சத்தில் இரு பிள்­ளை­க­ளையும் மனை­வி­யையும் வெட்டிப் படு­கொலை செய்த சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டை­ய­வ­ரான ராஜ­லஷ்மன் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்,

இரண்டு பிள்­ளை­க­ளையும் மஞ்சள் நீரில் குளிக்க வைத்து மனை­விக்கு தெரி­யாத வாறே தான் இடுப்பில் வாளை மறைத்து கொண்டு சென­ற­தா­கவும் சந்­தே­க­ந­ப ரான ராஜ­லக்‌ஷ்மன் பொலி­ஸா­ரிடம் கூறி­யுள்ளார். இதே­வேளை, சிரார்­களை வெட்டி கொலை செய்து அவர்­களின் இரத்­தத்தை வீட்டின் நான்கு மூலை­க­ளிலும் கொட்­டி­யி­ருந்­த­தா­கவும் தெரி­ய­வ­ரு­கின்­றது.

சந்­தே­க­ந­ப­ரான ராஜ­லக்‌ஷ்­மனின் மனைவி கடந்த மூன்று தினங்­க ளுக்கு முன்னர் தனது சகோ­த­ரி யிடம், கண­வ­ரான ராஜ­லஷ்மன் புதையல் பைத்­தி­யத்­துடன் திரி­கின்றான். என்றும் பிள்­ளை­க­ளுக்கு ஏதேனும் நடந்து விடுமோ என அச்­சத்­து டன் கூறி­ய­தா­கவும் உயி­ரி­ழந்த நித்­தி­யாவின்  சகோ­த­ரியின் வாக்கு மூலத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கொலை சந்­தேக நப­ரான ராஜ­லஷ் மன் மேசன் வேலை செய்து வரு­வ­தா­கவும் கடந்த 07 மாதங்­க­ளாக எவ்­வித தொழில்­க­ளுக்கும் செல்­லாமல் வீட்டில் அதி­க­ளவில் பூசை வழி­பா­டு­களில் ஈடு­பட்டு வந்­த­தா­கவும் அவ­ரது நண்­ப­ரான கே.கஜேந்­திரன் (38வயது) தெரி­வித்தார்.