அந்நியச் செலாவணி கட்டமைப்பினை அதிகரிக்க கடற்றொழில் அமைச்சு நடவடிக்கை - டக்ளஸ்

Published By: Vishnu

01 Sep, 2022 | 10:16 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)

நாட்டின் அந்நியச் செலாவணி கட்டமைப்பினை அதிகரித்துக் கொள்வதற்கு பங்களிப்பு வழங்கும் வகையில், ஏற்றுமதியின் ஊடாக அதிகளவு அந்நியச் செலாவணியை ஈட்டிக் கொள்கின்ற  செயற்திட்டங்களை கடற்றொழில் அமைச்சு மேற்கொண்டு வருகின்றது என  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் 01 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற இடைக்கால வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இன்றைய பொருளாதார நிலையிலிருந்து மீள்வதற்காக, குறுகிய மற்றும் நீண்டகால நடைமுறைச் சாத்தியமான திட்டங்களை முன்வைத்து, இந்த இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  முன் வைத்திருப்பது, நட்டின் தலைவர் என்ற வகையில் ஒரு முன்மாதிரி செயற்பாடாகும். இத்தகைய செயற்பாடுகளுக்கு போதிய பங்களிப்பு வழங்கும் வகையில், ஏற்றுமதியின் ஊடாக அதிகளவு அந்நியச் செலாவணியை ஈட்டிக் கொள்கின்ற நிலைபேறான செயற்திட்டங்களை கடற்றொழில் அமைச்சு பரவலாக முன்னெடுத்து வருகின்றது .

 அதேபோன்று கடலட்டைப் பண்ணைகளை விஸ்தரித்தல், அதற்கென கடலட்டை கருத்தரிப்பு நிலையங்களை ஸ்தாபித்தல், குஞ்சு வளர்ப்பு மையங்களை ஸ்தாபித்தல், ஏற்றுமதி சார்ந்த இறால் வளர்ப்பு, கடல் பாசி வளர்ப்பு, அது சார்ந்த பெறுமதி சேர் ஏற்பாடுகள், சங்கு உற்பத்தி மேம்பாடு போன்ற வேலைத் திட்டங்கள் பொருத்தமான இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை இங்கு தெரிவிக்க விரும்புகின்றேன்.

அத்துடன், கடலுணவு வகைகளை ஏற்றுமதி செய்வதற்கு வசதியாக நாம், பலநாட் கலங்களுக்கும் தேவையான வசதிகளை வழங்கி, வலுப்படுத்தி வருகின்றோம். எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்ட காலங்களில்கூட, மாற்று ஏற்பாடுகளை முன்னெடுத்து, ஏற்றுமதி சார்ந்த கடலுணவு உற்பத்தியில் ஈடுபடுகின்ற பலநாட் களங்கள் தொடர்ந்து தொழிலில் ஈடுபடுவதற்கான வழிகளை நாம் வகுத்துக் கொடுத்திருந்தோம்.

நன்னீர் வேளாண்மை சார்ந்து இந்த வருடத்தில் இதுவரையில், நாடளாவிய ரீதியில் 25 மாவட்டங்கள் தோறும் 1044 பாரிய, நடுத்தர, சிறிய குளங்கள் மற்றும் பருவகால நீர்நிலைகளில் 147,042,543 ரூபா செலவில், 5கோடி 2,675,300 மீனினக் குஞ்சுகளை வைப்பில் இட்டுள்ளோம். இப்போது தாராளமாக இல்லை எனினும், மண்ணெண்ணெய் பரவலாக நாடு முழுவதுமாக கிடைத்து வருகின்றது என நினைக்கின்றேன். அதேவேளை, மண்ணெண்ணெய், டீசல் போன்றவற்றை தனியார் மூலமாகவும் இறக்குமதி செய்து, கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் தாராளமாக கிடைப்பது உறுதிப்படுத்தப்படும் என்பதுடன் மண்ணெண்ணெய் விலையேற்றத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களுக்கு மானியம் கிடைப்பதற்கும் ஏதோவொரு வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன ஆகியோருடன் கலந்துரையாடியதன் பயனாக இம்முறை இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தில் கடற்றொழிலாளர்களுக்கும், அதேநேரம் மின்சார வசதியற்ற மலையக மக்களுக்கும் நிவாரணம் வழங்குவதற்கென 5.000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் எமது கடற்றொழிலாள மக்கள் மற்றும் மலையக மக்கள் சார்பில் ஜனாதிபதியும், நிதி அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும்  பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதேநேரம் இந்திய இழுவை வலைப் படகுகளின் ஆக்கிரமிப்பு தொடருமானால் 2018ஆம் ஆண்டு சட்டத்தின் பிரகாரம் ஏற்கனவே அரசுடமையாக்கப்பட்டுள்ள இந்திய இழுவை வலைப் படகுகளை, அவற்றின் தொழில் முறைமையை மாற்றி எமது கடற்றொழிலாளர்களிற்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க இருப்பதையும் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.

மேலும் பேர்ள் எக்ஸ்பிரஸ் கப்பல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அடுத்த கட்ட நிவாரணங்களை விரைவில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை நிவாரணங்கள்  கிடைக்கப் பெறாதவர்கள், கடற்றொழில் அமைச்சை அல்லது சம்மந்தப்பட்ட கடற்றொழில் திணைக்களப் பணிப்பாளர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஏற்றுமதி துறைக்கு...

2025-03-18 17:05:12
news-image

இன்றைய வானிலை

2025-03-19 06:23:07
news-image

'கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு” எனும் பெயரை...

2025-03-19 05:00:29
news-image

சந்தாங்கன்னி மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நீச்சல் தடாக...

2025-03-19 04:04:47
news-image

லால் காந்தவிடமிருந்து விசாரணைகளை ஆரம்பியுங்கள் ;...

2025-03-18 14:41:18
news-image

கிரிக்கெட் சபையில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு...

2025-03-18 16:48:03
news-image

அரச செலவில் எந்தவொரு தனிப்பட்ட பயணமும்...

2025-03-18 21:40:09
news-image

கிரிக்கெட் சபையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி...

2025-03-18 16:49:04
news-image

மட்டக்களப்பில் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்கும்...

2025-03-18 22:33:07
news-image

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தில் திருத்தம்

2025-03-18 21:38:21
news-image

பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலுக்கு இணைத்துக்கொள்ள தடையாக...

2025-03-18 15:34:29
news-image

சுகாதார சேவையாளர்களின் முறையற்ற பணிப்புறக்கணிப்பு குறித்து...

2025-03-18 16:43:50