(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனநாயகம் தொடர்பில் பேசிக்கொண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி அடக்குமுறையை செயற்படுத்தி வருகின்றார். இந்த இரட்டை வேடத்தை அவர் கைவிடவிட்டு, சொல்லும் விடயத்தில் உண்மையானவராக இருக்கவேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 01 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற இடைக்கால வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமாரக இருக்கும் போது தெரிவித்த விடயங்களுக்கும் தற்போது அவர் ஜனாதிபதியான பின்னர் செயற்படும் விடயங்களுக்கும் இடையில் பாரிய வித்தியாசம் காணப்படுகின்றது.
குறிப்பாக பயங்கரவாத தடைச்சட்டத்தை சுருட்டிக்கொள்வதாக சர்வதேசத்துக்கு அவர் தெரிவித்திருந்தார். ஆனால் இன்று அவர் அந்த சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதை காணக்கூடியதாக இருக்கின்றது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவந்த பல்கலைக்கழக மாணவர்களை கைதுசெய்ததை நாங்கள் கண்டிக்கின்றோம். இது அநியாயமாகும்.
அதேபோன்று காலி முகத்திடலி போராட்டம் தொடர்பில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருக்கும்போது உயர்வாக கூறியதுடன் ஜனநாயக நாட்டில் அவ்வாறான போராட்டங்களுக்கு இடமளிக்கப்பவேண்டும் என தெரிவித்தார்.
அதேநேரம் காலிமுகத்திடல் போராட்டத்தை தொடர்ந்து கொண்டுசெல்வதற்கும் அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுப்பதற்கும் குழுவொன்றை அமைப்பதாகவும் தெரிவித்தார்.
ஆனால் அவர் ஜனாதிபதியாகி 24மணி நேரம் செல்வதற்கு முன்னர், இரவோடு இரவாக காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டிருந்தார். அதனால் அரசாங்கம் தெரிவிக்கும் விடயங்களில் உண்மைத்தன்மை இருக்கவேண்டும். இவ்வாறு இல்லாமல் ஒன்றை சொல்லி அதற்கு மாற்றமாக செயற்படும் நிலைக்கு இடமளிக்க முடியாது.
அத்துடன் பாரிய 61ஆயிரம் குடும்பங்களுக்கு 10ஆயிரம் ரூபா நிவாரணம் வழங்குவதாக வரவு செலவு திட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் உலக உணவு திட்டத்தின் ஜூலை மாத புள்ளிவிபரங்களின் பிரகாரம் நூற்றுக்கு 49.4 வீதமானவர்கள் உணவு பாதுகாப்பு தொடர்பில் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று நூற்றுக்கு 53.1வீதமானவர்கள் போதுமான உணவு கடைக்காதவர்கள் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. எனவே 61ஆயிரம் குடும்பங்கள் அல்ல, நாட்டின் சனத்தொகையில் அரைவாசிப்பேர் வறுமை நிலைக்கு ஆளாகி இருக்கின்றார்கள் என்தே உண்மையாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM