இலங்கை மக்கள் சார்பில் முன்னெடுக்கப்பட்ட 'நன்றி இந்தியா ' 

01 Sep, 2022 | 04:26 PM
image

இந்திய அரசாங்கத்தினாலும் மக்களாலும் உரிய தருணத்தில் வழங்கப்பட்ட உதவிகளுக்கு இலங்கை மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கும் நோக்கில் 'நன்றி இந்தியா' என்ற தலைப்பிலான நிகழ்வொன்று நேற்று புதன்கிழமை கொழும்பிலுள்ள தாஜ் சமுத்திரா ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே பங்கேற்றுக்கொண்டிருந்ததுடன், இலங்கை மக்களின் நன்றியை வெளிப்படுத்தும் வகையில் அவரிடம் விருதொன்றும் கையளிக்கப்பட்டது. 

அதுமாத்திரமன்றி கலாநிதி கொஸ்கொட சிறி சுபுதி அனுநாயக்க தேரர், கலாநிதி எம்.விமலசார தேரர், பேராசிரியர் மல்லாவ ஹன்டி ஜகத் ரவீந்திர, கிமார்லி பெர்னாண்டோ, கலாநிதி வின்யா ஆரியரத்ன, நவீன் குணரத்ன, ஏ.பால்ராஜ், நயோமினி வீரசூரிய, மஹேந்திர அமரசூரிய, சுலோச்சன சேகர மற்றும் கே.ஆர்.ரவீந்திரன் ஆகியோர் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகாலத்தொடர்புகள் குறித்தும், இந்தியாவினால் உரிய நேரத்தில் வழங்கப்பட்ட உதவிகளின் முக்கியத்துவம் குறித்தும் உரையாற்றியதுடன் அவற்றுக்காக இலங்கை மக்களின் சார்பில் மனபூர்வமான நன்றியையும் வெளிப்படுத்தினர்.

நாடு மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், அதிலிருந்து மீள்வதற்காக உரிய தருணத்தில் இந்திய அரசாங்கத்தினாலும் அந்நாட்டு மக்களாலும் வழங்கப்பட்ட உதவிகளுக்கு இலங்கை மக்கள் தமது நன்றியை வெளிப்படுத்தியிருப்பதுடன் அதனைப் புலப்படுத்தும் வகையிலான விருதொன்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிடம் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

படங்கள் - ஜே. சுஜீவகுமார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்