சீன உரக்கப்பல் விவகாரம் தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கை : மஹிந்த அமரவீர

Published By: Digital Desk 3

01 Sep, 2022 | 08:25 PM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம். வசீம்)

சீன உர கப்பலுக்கு செலுத்திய 6.9 மில்லியன் டொலரை மீள பெறுவதற்கும் அல்லது அதற்கு பதிலாக இரசாயன உரத்தை பெற்றுக்கொள்வதற்கும் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன.

உர விவகாரம் தொடர்பில் சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ள சட்டமாதிபரின் ஆலோசனை கோரப்பட்டுள்ளது என விவசாயத்துறை மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றில்  நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற அமர்வின் போது சீன உர கப்பல் விவகாரம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சமிந்த விஜேசிறி முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சீன உர கப்பலுக்கு செலுத்திய 6.9 மில்லியன் டொலர் தொடர்பில் பலதரப்பட்ட விடயங்கள் குறிப்பிடப்படுகின்றன. இவ்விடயம் தொடர்பில் ஆராய விவசாயத்துறை அமைச்சின் தலைமையில் துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய வகையில் அமைச்சரவை குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குழுவின் அறிக்கை கிடைக்கப் பெற்றவுடன் அதனை பாராளுமன்றிற்கு முழுமையாக சமர்ப்பிப்பேன். சீன உர கப்பலுக்கு செலுத்திய 6.9 மில்லியன்  டொலரை மீள பெற்றுக்கொள்வதற்கு முன்னெடுத்த முயற்சி தோல்வியடைந்தது. அத்துடன் அந்த தொகைக்கு பதிலாக இரசாயன உரத்தை பெற்றுக்கொள்ள முன்னெடுத்த முயற்சியும் தோல்வியடைந்தது.

சீன உர கப்பலுக்கு செலுத்திய கட்டணம் மற்றும் அதனுடபனான முரன்பாடுகள் தொடர்பில் அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கையினை எடுக்க சட்டமாதிபரின் ஆலோசனையை கோரியுள்ளோம்.இந்த பிரச்சினைக்கு யார் காரணம் என்பதை தற்போது குறிப்பிட முடியாது. குழுவின் அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இரசாயன உரம் தடை செய்யப்பட்டதை தொடர்ந்து தோற்றம் பெற்ற விவசாயிகளின் போராட்டம் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணியாக உள்ளது.உர கொள்கை தொடர்பிலான தவறான தீர்மானத்தை திருத்திக்கொண்டுள்ளோம்.

இடைக்கால வரவு செலவு செலவு திட்டத்தின் விவசாயிகளுக்கு நிவாரனம் வழங்கும் பல முன்மொழிவுகள் உள்வாங்கப்பட்டுள்ளன. விவசாயத்துறையை மேம்படுத்தி உணவு பாதுகாப்பு உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பிரதான இலக்காகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

களனி பல்கலைக்கழக பேராசிரியர் விபத்தில் சிக்கி...

2025-03-26 10:38:06
news-image

காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளிற்கு எதிர்ப்பு தெரிவித்து...

2025-03-26 10:30:38
news-image

விகாராதிபதி வெட்டிக்கொலை : சந்தேகநபர் தப்பியோட்டம்...

2025-03-26 10:21:12
news-image

சிவனொளிபாத மலை யாத்திரைக்குச் சென்று போதைப்பொருள்...

2025-03-26 10:01:49
news-image

ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை 8...

2025-03-26 09:39:57
news-image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி...

2025-03-26 09:35:37
news-image

கம்பஹா மாவட்டத்தில் சில பகுதிகளுக்கு நாளை...

2025-03-26 09:21:47
news-image

இன்றைய வானிலை

2025-03-26 08:57:47
news-image

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் யுவதியின்...

2025-03-26 04:11:39
news-image

பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கும் பாலின...

2025-03-26 04:07:54
news-image

யாழில் அனைத்து சபையிலும் வென்று இருப்போம்...

2025-03-26 04:00:55
news-image

யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன்...

2025-03-26 03:52:49