பாகிஸ்தான் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்துக்கு வெள்ளை மாளிகை இரங்கல்

Published By: Digital Desk 3

01 Sep, 2022 | 11:51 AM
image

பாகிஸ்தானில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு வெள்ளை மாளிகை இரங்கல் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் தென்மேற்கு பருவமழையையொட்டி கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. 

இதனால், நாடு முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளம் அதிகம் பாதித்த 110 மாவட்டங்களில் சுமார் 57 இலட்சம் பேர் தங்குமிடம் மற்றும் உணவு இல்லாமல் உள்ளனர். 

பாகிஸ்தானில் கனமழை, வெள்ளத்துக்கு இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் என தேசிய பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும் தேசிய அவசர நிலையை அறிவித்து, மீட்பு நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தி வருகிறது.

பருவமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் விளைவாக பாகிஸ்தானின் மூன்றில் ஒரு பகுதி நீரில் மூழ்கியுள்ளதாக அந்நாட்டின் பருவநிலை மாற்றத்துறை மந்திரி ஷெர்ரி ரஹ்மான் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். 

மேலும், பாகிஸ்தான் மக்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்ப் 'தவறான தகவல் உலகத்தில் வாழ்கின்றார்"...

2025-02-19 17:14:46
news-image

எலான் மஸ்க் கருத்து சுதந்திரத்திற்கு பாதிப்பை...

2025-02-19 15:07:39
news-image

பாக்கிஸ்தானின் பலோச்சிஸ்தானில் வரிசையாக நிற்கவைத்து பேருந்து...

2025-02-19 13:22:56
news-image

'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன்...

2025-02-19 10:36:20
news-image

நிமோனியா தொற்குள்ளாகியுள்ளார் பாப்பரசர் பிரான்ஸிஸ் -...

2025-02-19 10:27:08
news-image

பொலிவியாவில் கோர விபத்து ; 30...

2025-02-18 16:23:00
news-image

பாலஸ்தீனியர்கள் என நினைத்து இஸ்ரேலை சேர்ந்தவர்கள்...

2025-02-18 14:44:05
news-image

சர்ச்சைக்குரிய பிரபல யூடியூப்பர் ரன்வீர் அல்லாபாடியாவுக்கு...

2025-02-18 14:59:48
news-image

மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி :...

2025-02-19 11:22:57
news-image

“ஐரோப்பா புட்டின் டிரம்ப் அச்சிற்கு சவால்...

2025-02-18 12:25:23
news-image

கர்நாடகாவில் 15 வயது சிறுவன் சுட்டதில்...

2025-02-18 13:23:52
news-image

கனடாவில் தலைகீழாக கவிழ்ந்த விமானம் -...

2025-02-18 08:57:01