காணாமல்போனோருக்கு என்ன நேர்ந்தது என்ற கேள்விக்கான பதிலை வழங்குவதற்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்கத்தயார் - சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அறிவிப்பு

Published By: Vishnu

01 Sep, 2022 | 08:21 PM
image

(நா.தனுஜா)

காணாமல்போனோரின் குடும்பங்களின் பொருளாதார, சட்ட, நிர்வாக மற்றும் உணர்வு ரீதியான தேவைப்பாடுகள் தொடர்பில் கவனம்செலுத்தி, உரியவாறான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான உதவிச்செயற்திட்டமொன்றை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தவிருப்பதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அறிவித்துள்ளது.

வருடாந்தம் ஓகஸ்ட் 30 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எனவே உலகளாவிய ரீதியில் இடம்பெற்ற போர்கள், வன்முறைகள், இயற்கை அனர்த்தங்கள், மனிதாபிமான நெருக்கடிகளால் தமது அன்பிற்குரியவர்களை இழந்த அல்லது குடும்பத்தினரைப் பிரிந்த அனைவரையும் வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தில் (நேற்று முன்தினம்) நினைவுகூருவதாகத் தெரிவித்துள்ள சர்வதேச செஞ்சிலுவை சங்கம், தமது அன்பிற்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்ளமுடியாமல் துன்பப்படுபவர்களின் பிரச்சினை, பெரிதாக அடையாளங்காணப்படாத மனிதாபிமானப் பிரச்சினைகளில் ஒன்றாக இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளது. 

'தமது பெற்றோருக்கு, கணவருக்கு, பிள்ளைக்கு, சகோதரருக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியாமலிருப்பதென்பது, சம்பந்தப்பட்ட குடும்பங்களைப் பொறுத்தமட்டில் தாங்கிக்கொள்ள இயலாத சுமையாகக் காணப்படுவதுடன் நினைவுகூரவும் முடியாமல் - அவர்கள் மத்தியில் நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையிலான போராட்டத்தைத் தோற்றுவித்திருக்கின்றது.

 காணாமல்போன தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்வதற்கான உரிமை அனைவருக்கும் இருக்கின்றது. எனவே காணாமல்போன தமது அன்பிற்குரியவர்கள் எங்கே? அவர்களுக்கு என்ன நேர்ந்தது? என்பதை அறிந்துகொள்வதற்கு சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் கொண்டிருக்கின்ற உரிமைக்கு முன்னுரிமையளித்து, அவர்களுக்குரிய பதிலை வழங்குவதற்கு அரசுக்கு அவசியமான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்கத்தயாராக இருக்கின்றோம் என்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22