கேள்வி
நான் ஒரு பெண். எனக்கு வயது 24. நான் மிக மெலிவாகக் காணப்படுகிறேன். கன்னங்கள் வற்றிப் போயிருக்கின்றன. இதற்கு ஏதேனும் குறிப்புகள் தருவீர்களா?
பதில்
எடையை அதிகரிக்க அதிக அளவு கலோரி நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஏனெனில் சரியான அளவு ஊட்டச்சத்துக்கள், ப்ரோட்டீன், காபோஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் உடலுக்கு கிடைத்தால்தான், விரைவில் உடல் எடையை கூட்ட முடியும்.
எனவே, எந்த உணவுகளை உட்கொண்டால், உடல் எடை அதிகரிக்கும் என்பதை தெரிந்துகொள்வது நல்லது. ப்ரோட்டீன் அதிகம் இருக்கும் உணவுப் பொருட்களான இறைச்சி, மீன், முட்டை, வான் கோழி, கோழியிறைச்சி ஆகியவற்றை தினமும் அதிகளவில் உணவில் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் அதிகரிக்கும். சோயாப் பொருட்களை அதிகம் சேர்த்துக் கொண்டாலும் பலன் கிடைக்கும்.
ஓட்ஸ், சோளம் போன்ற தானியங்கள், பாண் போன்றவற்றில் காபோஹைட்ரேட் அதிகம் உள்ளது. பழங்களில் மாம்பழம், அப்பிள், செரி, திராட்சை போன்றவையும், கெரட், வால் மிளகு, முள்ளங்கி போன்ற மரக்கறியும், பாஸ்தா, சிவப்பு அரிசி உணவுகள், கொண்டைக்கடலை போன்றவற்றையும் தினமும் உணவில் சிறிது சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமாக எடை அதிகரிக்கும்.
பாதாம் பருப்பு, ஒலிவ் மற்றும் சூரியகாந்தி எண்ணெய், நல்லெண்ணெய், கஜூ, நிலக்கடலை, பட்டர், பால் போன்ற அனைத்தி லும் கொழுப்பு அதிகம் நிறைந்துள்ளது. இவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்.
சிலர், உடல் எடை அதிகரிக்கவென்று நொறுக்குத் தீனிகளைச் சாப்பிடுவார்கள். அவர்கள், கடலை வகைகள், அப்பிள், உருளைக் கிழங்கு சிப்ஸ் போன்றவற்றை சாப்பிடுவதும் நல்லது. அதிலும் சீஸ் மற்றும் காய்ந்த பழங்களைச் சாப்பிடுவதும் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.
சொக்லேட்டில் கூட அதிக கலோரிகள் நிறைந்துள்ளன. ஆகவே இத்தகைய உணவுகளை உண்டால், உடல் எடை அதிகரிப்பதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
இவற்றை ஒரே நேரத்தில் சாப்பிடாமல், பசிக்கும்போது மட்டும் இவற்றைச் சாப்பிட்டு வர, உடல் எடை தானாக உயரும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM