தோல் நோய்­­களுக்கு தீர்வை வழங்கும் நன்னாரி

Published By: Devika

01 Sep, 2022 | 12:43 PM
image

ன்னாரி குடிப்ப­தற்கு இதமாகவும், உடல் வியர்­வையைக் கூட்டுவ­தற்கும், சிறுநீர் போக்கை கூட்டு­வதற்கும் குருதியை தூய்­­மைப்படுத்துவதற்கும் பயன்­படுகிறது. இது சிபிலிஸ் (syphilis), மூட்டுவலி, உடல் சூடு மற்றும் தோல் நோய்­­களுக்கும் தீர்வாக பயன்­படு­கிறது.

உடலில் உஷ்ணத்தைத் தணித்து உடம்பை உரமாக்கக்­கூடிய தன்மை உடையது. ஒற்­றைத் தலைவலிக்கு, செரி­மானம், நாட்பட்ட வாத நோய், பித்த நீக்­கம், மேக நோய், பால்வினை நோய் ஆகிய­வற்றுக்கு நல்ல மருந்­தாகும்.

பச்சை நன்னாரி வேர் 5 கிராம் நன்கு அரைத்து 200 மி.லி. பாலில் சாப்பிட்டு வர மூலச்சூடு, மேக அனல், மேகவேட்டை, நீர்கடுப்பு, நீர் சுருக்கு, வறட்டு இருமல் ஆகியவை தீரும். நீண்ட நாள் சாப்பிட நரையை மாற்றும் தன்மையுடையது.

பச்சைவேரை 20 கிராம் சிதைத்து 200 மி.லி. நீரில் ஒரு நாள் ஊறவைத்து வடிகட்டி 100 மி.லி. வீதம் காலை, மாலை குடித்து வரப் பித்த நோய், சிறு நஞ்சு, நீரிழிவு, வேட்டைச்சூடு, கிரந்தி, சொறிசிரங்கு, தாகம், அதிக பசி, மேக நோய் தீரும். பத்தியம் அவசியம்.

வியர்வை நாற்றம் நீங்க மிளகு, உப்பு, புளி இவைகளுடன் நன்னாரியின் இலை, பூ, காய், கொடி, வேர் முதலியவற்றுடன் நெய் சேர்த்து வதக்கி 90 நாட்கள் உட்கொள்ள வேண்டும்.

நன்னாரி வேர்ப் பட்டையை நீரில் ஊறவைத்து தேவையான அளவு பாலும், சீனியும், கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, உடலைத் தேற்றுவ­தோடு நாட்பட்ட இருமல் நிற்கும்.

நன்னாரி வேரை வாழை­யிலை­யில் வைத்­துக் கட்டி எரித்து சாம்பலாக்கி அதனுடன் தேவை­யான அளவு சீரகமும், சீனியும் பொடித்துக் கலந்து அருந்தி­வர சிறுநீரக நோய்கள் அனைத்­தும் வில­கும்.

வயிறு, குடல், இவைகளில் உண்டாகும் நோய்­கள் குணமாகும். வேர் சூரணம் அரை கிராம் காலை, மாலை வெண்ணையுடன் எடுத்துகொண்டால் ஆரம்ப குஷ்டம் தீரும். தேனில் உட்கொண்டால் காமாலை தீரும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெண்மணிகளுக்கு ஏற்படும் பைலோட்ஸ் கட்டி பாதிப்பிற்குரிய...

2024-11-02 14:12:41
news-image

விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் ஹெர்னியா பாதிப்புக்குரிய...

2024-11-01 18:42:51
news-image

மீடியல் டைபியல் ஸ்ட்ரெஸ் சிண்ட்ரோம் எனும்...

2024-10-30 15:54:33
news-image

கேங்க்லியன் நீர்க்கட்டி எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-10-29 16:09:36
news-image

ஒட்டோமைகோசிஸ் எனப்படும் காதில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2024-10-28 17:20:21
news-image

சமச்சீரற்ற இதயத் துடிப்பு பாதிப்பை துல்லியமாக...

2024-10-26 18:35:49
news-image

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சுழற்சி நிறுத்தப்...

2024-10-25 05:59:15
news-image

நீர்ச் சத்து குறைபாட்டின் காரணமாகவும் சிறுநீரக...

2024-10-23 18:28:12
news-image

தைரொய்ட் புற்றுநோய் பாதிப்பிற்கு வடு இல்லாத...

2024-10-22 16:53:39
news-image

ஃபைப்ரோடெனோமா எனும் மார்பக கட்டி பாதிப்பிற்குரிய...

2024-10-21 22:23:09
news-image

சருமத்தை பாதுகாக்கவேண்டியதன் அவசியம் என்ன?

2024-10-20 18:52:57
news-image

அவாஸ்குலர் நெக்ரோசிஸ் எனும் எலும்பு திசு...

2024-10-18 17:10:08