தாய்ப்பால் வங்கிகளில் தாய்ப்பாலைத் தானமாகப் பெற்று சேமிக்க முடியும். அது தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு உணவாக அமையும். பிறந்து சில நாட்களில் குழந்தை இறந்தவர்கள், அதிகளவு தாய்ப்பால் சுரப்பவர்கள் மட்டுமல்லாது, அனைத்து தாய்மார்களும் தாய்ப்பால் தானம் செய்யமுடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
பச்சிளங் குழந்தைக்கு ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பாலைத் தவிர வேறெதுவும் தர வேண்டாம் என்பது மருத்துவர்களின் ஆலோசனை. மாட்டுப்பாலை விட, தாய்ப்பால் சத்தானது, குழந்தையின் ஆரோக்கியத்துக்கு உகந்தது. தாய்ப்பால் மட்டுமே குடித்து வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக அமையும். ஆனால், வேலைக்குச் செல்லும் பெண்கள், தாய்ப்பால் சுரக்காதவர்கள், ஊட்டச்சத்து கிடைக்காதவர்கள் ஆகியோருக்கு இது சாத்தியமாவதில்லை.
வேலைக்குச் செல்லும் பெண்கள், தாய்ப்பாலை பாத்திரத்தில் சுரந்து சேமிக்க முடியும். அறை வெப்ப நிலையில், அதிகபட்சம் ஏழு மணி நேரம் வரை இந்தப் பாலைச் சேமித்து வைக்கலாம். குழந்தைக்குப் பசிக்கும்போது யாரேனும் ஒருவர் அதை ஸ்பூனால் எடுத்து ஊட்டி விடலாம். தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளின் ஆரோக்கியத்துக்குத் தாய்ப்பால் வங்கிகள் உதவியாக அமையும்.
சமூகத்தில் நிலவும் தயக்கத்தை உடைத்து, அனைத்துக் குழந்தைகளுக்கும் தாய்ப்பால் கிடைக்கும்படி செய்வது ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM