மேக்கப் மூலம் வெளிப்படும் ஆளுமை

Published By: Devika

01 Sep, 2022 | 09:32 AM
image

‘ஒப்பனை’ என்பது தோற்றத்தை அழகாக எடுத்துக்காட்டுவது மட்டுமல்ல. நீங்கள் விரும்பும் விதத்தில் உங்களை உருவாக்குவதும் தான். நாம் போடும் மேக்கப்பை, நமது ஆளுமையை வெளிப்படுத்தும் கருவியாக மாற்றுவது எவ்வாறு என்பதைப் பற்றி பார்ப்போம்.

கண்கள்: கண்கள் மனதின் ஜன்னல்கள். எனவே, கண்களைச் சுற்றி செய்யும் அலங்காரம், நமது மனதின் ஆழத்தில் உள்ள சாயல்களை வெளிப்படுத்தும். பெரும்பாலான இளம்பெண்கள் அணியத் தொடங்­கும் முதல் அழகுசாதனப் பொருள் கண் மை (காஜல்). கண்களுக்கு செய்யும் ஒப்பனைக்கு முகத்தை மாற்றும் சக்தி உள்ளது. 

முகம்: கண்களுக்கு அடுத்து நாம் கவனம் செலுத்த வேண்டியது முகம்தான். லேசான மேக்கப் மட்டும் இருந்தாலே, முகத்தை அழகாக எடுத்துக் காட்டலாம். குறைவாக ஒப்பனை செய்யும்போது, முகம் பிரகாசமாக மட்டுமின்றி, தன்னம்பிக்கையுடனும் வெளிப்படும். இதில், கவனிக்க வேண்டிய விஷயம், நம் சரும நிறத்திற்கு ஏற்ற பவுண்டேஷனைத் தெரிவு செய்தல். இது முகத்தின் அழகை மெருகூட்டிக் காட்டும். 

லிப்ஸ்டிக்: முகத்தில், நாம் உதிர்க்கும் புன்னகையை தன்னம்­பிக்கை­யுடன் வெளியே பிரதிபலிக்க உதட்டை அழகாக வைத்திருப்பது அவசியம். வறட்சியுடனோ, வெடிப்புடனோ உதடு இருந்தால், பல பாதிப்­புகள் ஏற்படும். உதட்டை எப்போதும் மென்மையாகவும், ஈரப்ப­தத்துடனும் வைக்க ‘லிப் பாம்’ பயன்படுத்தலாம். ஒப்பனைக்கேற்ப லிப்ஸ்டிக் நிறத்தைத் தெரிவு செய்யலாம். 

அழகு, ஒப்பனை, தோல் பராமரிப்பு மற்றும் சுய பாதுகாப்பு போன்­றவை பெண்களுக்கு முக்கியமானவை. ‘மேக்கப்’ நம் அழகை வெளிக்­காட்ட உதவும் ஓர் ஆயுதம். இதனால், பெண்கள் தங்களை சக்தி வாய்ந்த­வர்களாக உணர முடியும். இது உங்களின் ஆளுமையை மீட்­டெடுப்ப­தற்கான சிறந்த வழியுமாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்