(என்.வீ.ஏ.)
அனுமானங்கள் வெளியிடுவதை விட ஆடுகளத்தில் ஆற்றல்களை வெளிப்படுத்துவதே முக்கியம் என பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் இளம் சகலதுறை வீரர் மெஹிதி ஹசன் மிராஸ் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானை விட பங்களாதேஷ் பலம் குன்றிய அணி என இலங்கை அணித் தலைவர் தசுன் ஷானக்க கூறிய கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே மெஹிதி ஹசன் மிராஸ் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஆப்கானிஸ்தான் அணியில் உலகத் தரம்வாய்ந்த பந்துவீச்சு இருக்கிறது. பிஸ் (முஸ்தாபிஸுர் ரஹ்மான்) ஒரு சிறந்த பந்துவீச்சாளர் என்பதை நாம் அறிவோம். ஷக்கிபும் உலகத் தரம்வாய்ந்த பந்துவீச்சாளர். ஆனால், அவர்களை விட உலகத் தரம்வாய்ந்த வேறு பந்துவீச்சாளர்கள் அந்த அணியில் இல்லை. எனவே ஆப்கானிஸ்தானுடன் ஒப்பிட்டால் பங்களாதேஷ் ஓர் எளிதான எதரணி' என ஆப்கானிஸ்தானுடனான போட்டியில் படுதோல்வி அடைந்த பின்னர் தசுன் ஷானக்க தெரிவித்தார்.
தசன் ஷானக்கவின் இந்தக் கருத்தை மறுத்த மெஹிதி ஹசன் மிராஸ் 'ஷானக்கவின் கருத்து தவறு என்பதை ஆடுகளத்தில் நிரூபிப்போம்' என சூளுரைத்தார்.
துபாயில் நடைபெற்ற ஆசிய கிண்ண ஆரம்பப் போட்டியில் இலங்கையை 105 ஓட்டங்களுக்கு சுருட்டிய ஆப்கானிஸ்தான், 10.1 ஓவர்களில் 8 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டியது.
ஆனால், பங்களாதேஷுடனான இரண்டாவது போட்டியில் கடும் சிரமத்திற்கு மத்தியில் 19ஆவது ஓவரிலேயே ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றது.
'இந்த அணி திறமைவாய்ந்தது, இந்த அணி மோசமானது என நான் கருத்து வெளியிட விரும்பவில்லை. திறமையான ஆட்டமும் மோசமான ஆட்டமும் அரங்கில்தான் வெளிப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட நாளில் திறமையான அணி மோசமாக விளையாடினால் தோல்வி அடைய நேரிடும். அதேபோன்று மோசமான அணி ஒன்று மிகத் திறமையாக விiளாடினால் வெற்றிபெற முடியும். எனவே நாங்கள் அரங்கில் சந்திப்போம். அப்போது, அந்த நாளில் சிறந்த அணி வெற்றிபெறும். நான் கருதுவது என்னவென்றால், அரங்கில் அதனை நிரூபிக்க வேண்டும் என்பதுதான். நாம் திறமையாக விளையாடினால்தான் எந்த அணி சிறந்தது, எந்த அணி மோசமானது என்பதை எல்லோரும் அறிவார்கள். எனவே அனுமானிப்பதை விடுத்து ஆடுகளத்தில் திறமையாக விளையாடுவதே முக்கியம் என நான் கருதுகிறேன்' என்றார் மெஹெதி ஹசன் மிராஸ்.
பங்களாதேஷுக்கும் இலங்கைக்கும் இடையிலான தீர்மானம் மிக்க பி குழுவுக்கான ஆசிய கிண்ண முதலாம் சுற்று கிரிக்கெட் போட்டி வியாழக்கிழமை (01) இரவு நடைபெறவுள்ளது.
அந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணி, சுப்பர் 4 சுற்றில் ஆப்கானிஸ்தான், இந்தியா ஆகிய அணிகளுடன் இணைந்துகொள்ளும். நான்காவது அணியாக பெரும்பாலும் பாகிஸ்தான் தகுதிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM