தனியார் பஸ் உரிமையாளர்கள் இன்று நள்ளிரவு முதல் மேற்கொள்ளவிருந்த பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று மாலை நிதியமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாகனப் போக்குவரத்தின் போது தவறிழைக்கும் சாரதிகளுக்கான தண்டம் 2500 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக வரவுசெலவு திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் தீர்மானித்திருந்தனர்.
எவ்வாறாயினும் குறித்த தண்டப்பணம் அறவிடுவது தொடர்பில் எவ்வித மாறுபாடுகளும் இடம்பெறாது என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM