(என்.வீ.ஏ.)
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பிரதான சுப்பர் 4 சுற்று வாய்ப்பை உறுதி செய்யும் கங்கணத்துடன் ஹொங்கொங் அணியை துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இந்தியா இன்று இரவு எதிர்த்தாடவுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஹர்த்திக் பாண்டியாவின் அதிரடி ஆட்ட உதவியுடன் 2 பந்துகள் மீதமிருக்க 5 விக்கெட்களால் வெற்றியீட்டிய இந்தியா, இன்றைய போட்டியிலும் வெற்றிபெறும் என கருதப்படுகிறது.
ஆனால், 4 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவை சந்தித்த ஹொங்கொங் கடும் சவாலாக விளங்கியதை மறந்துவிட முடியாது.
இதே விளையாட்டரங்கில் நடைபெற்ற 50 ஓவர் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கும் பெரும் சவால் விடுத்து விளையாடிய ஹொங்கொங் 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது.
அப் போட்டியில் 92 ஓட்டங்களைக் குவித்த நிஸாகத் கான் தற்போது ஹொங்கொங் அணித் தலைவராக விiளாடிவருகிறார்.
அத்துடன் இன்னும் சில சிரேஷ்ட வீரர்களும் ஹொங்கொங் அணியில் இடம் பெறுகின்றது அவ்வணிக்கு வரப்பிரசாதமாக அமையவுள்ளது.
இன்றைய போட்டியில் ஹொங்கொங் அணிக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதால் என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தில் அவ்வணி ஆக்ரோஷத்துடன் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபுறத்தில் இன்றைய போட்டியில் இலகுவாக வெற்றிபெற்று சுப்பர் 4 வாய்ப்பை இந்தியா உறுதிசெய்துகொள்ளும் என நம்பப்படுகிறது.
சூரியகுமார் யாதவ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரிஷாப் பன்ட் இன்றைய போட்டியில் இந்திய அணியில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளார்.
இன்னும் சில மாற்றங்களையும் இந்தியா செய்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
ஹொங்கொங் அணி தனது அதிசிறந்த வீரர்களை இன்றைய போட்டியில் விளையாடவைக்கும்.
அணிகள் (பெரும்பாலும்)
இந்தியா: ரோஹித் ஷர்மா (தலைவர்), கே.எல். ராகுல், விராத் கோஹ்லி, ரிஷாப் பன்ட், தீப்பக் ஹூடா, ஹார்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஷ்வின், ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங்.
ஹொங்கொங்: நிஸாகத் கான் (தலைவர்), பாபர் ஹயாத், யஸ்மின் முர்ட்டாஸா, கின்ச்சிட் ஸா, ஸ்கொட் மெக்கெச்னி, ஹரூன் அர்ஷாத், அய்ஸாஸ் கான், ஸீஷான் அலி, ஏஷான் கான், அயுஷ் ஷுக்லா, மொஹம்மத் கஸான்பர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM