(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)
முன்னாள் ஜனாதிபதிக்காக அரசாங்கம் 400 மில்லியன் அல்ல 4 ரூபா கூட செலவழித்ததில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (31) இடைக்கால வரவு செலவு திட்ட அறிக்கை தொடர்பான விவாவதத்தில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ரோஹண பண்டார உரையாற்றுகையில்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் வீட்டை புதுப்பிப்பதற்காக 400 மில்லியன் ரூபா அமைச்சரவைக்கு சமர்ப்பித்து அனுமதித்துக்கொண்டுள்ளதாக தகவல் கிடைத்திருக்கின்றது என குறிப்பிட்டிருந்தார்.
இதன்போது அவசரமாக சபைக்குள் வந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பி தெளிவுபடுத்தி குறிப்பிடுகையில்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வுக்காக 400 மில்லியன் ரூபா அல்ல, 4ரூபா கூட செலவழித்ததில்லை. என்றாலும் முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களின் விதவைகளுக்காகவும் வீடுகள் வழங்கி, அவர்களை கவனித்துக்கொள்ள அரசாங்கத்துக்கு பொறுப்பு இருக்கின்றது என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM