இலங்கை அணியின் சுழற் பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் டெஸ்ட் பந்துவீச்சாளர் தரப்படுத்தலில் 2 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஐ.சி.சி. இன்று வெளியிட்ட டெஸ்ட் தரப்படுத்தலில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரப்படுத்தலில் முதலாம் இடத்தை இந்திய அணியின் அஸ்வின் பிடித்துள்ள நிலையில், மூன்றாம் இடத்தை தென்னாபிரிக்காவின் டேல் ஸ்டெயின் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.