K.B.சதீஸ்
பொதுமக்களுக்கான சட்டமுகாம் [legal camp] நிகழ்வு புதுக்குடியிருப்பு விழுது அலுவலகத்தில் இன்றைய தினம் (01.09.2022) இடம்பெற்றது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் பொதுமக்கள் அண்மைக்காலமாக குடும்ப வன்முறை, சிறுவர் துஸ்பிரயோகம், காணி பிரச்சினை, லஞ்ச ஊழல் என மக்கள் பல பிரச்சினைகளை இன்றைய காலப்பகுதியில் எதிர் கொள்கின்றார்கள். ஆனால் அவ்வாறான சாவல்களை எதிர்கொள்வதற்கு என்ன சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற அறிவினை கொண்டிராதவர்களாகவே இருக்கின்றனர்.
எனவே தற்கால மக்களின் தேவையறிந்து எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் தொடர்பாக சட்டம் மூலம் தீர்வினை எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம் என்பது தொடர்பாக விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தினரின் ஏற்பாட்டில் இன்றைய தினம் குறித்த சட்டமுகாம் புதுக்குடியிருப்பு விழுது அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் சிறுவர் துஸ்பிரயோகம், போதைப்பொருள் பாவனை, குடும்ப வன்முறை, காணிப்பிரச்சினை, தற்கொலை , பாடசாலை இடைவிலகல், இளவயது திருமணம் விபத்து, லஞ்ச ஊழல் தொடர்பான முறைப்பாட்டு பிரச்சினை, சட்டமுறையற்ற திருமண பதிவு தொடர்புடைய பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு குறித்த பிரச்சினைகளை சட்டத்தின் மூலமாக எவ்வாறு அணுகுவது தொடர்பான ஆலோசனைகளும், குறித்த பிரச்சினைகளுக்கான வழக்கினை எவ்வாறு பதிவு செய்து, பதிவு செய்யப்பட்ட வழக்குகளை தொடர்ச்சியாக முன்கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பான தீர்வுகள் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் வளவாளராக சட்டதரணி விதுரன் சுபா மற்றும் , புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர், சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர், உளவள துணையாளர், ஊடகவியலாளர், அமரா, சமாச உறுப்பினர்கள் ,மகளீர் அமைப்புக்கள் சார்ந்தோர், பொதுமக்கள், மற்றும் விழுது உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM