(நெவில் அன்தனி)
பங்களாதேஷுக்கு எதிராக ஷார்ஜா விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்ற பி குழுவுக்கான முதலாம் சுற்று ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்களால் ஆப்கானிஸ்தான் அபார வெற்றியீட்டியது.
இந்த வெற்றியுடன் தனது இரண்டாவது நேரடி வெற்றியை ஈட்டிய ஆப்கானிஸ்தான், சுப்பர் 4 சுற்றில் விளையாட முதலாவது அணியாக தகுதிபெற்றுக்கொண்டது.

128 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 18.3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 131 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.
இந்த வெற்றியில் முஜிப் உர் ரஹ்மான், ராஷித் கான் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகளும் நஜிபுல்லா ஸத்ரானின் அதிரடி துடுப்பாட்டமும் இப்ராஹிம் ஸத்ரானின் நிதானமான துடுப்பாட்டமும் முக்கிய பங்காற்றின.
அதிரடியாக ஓட்டங்களைக் குவித்த நஜிபுல்லா ஸத்ரான் 17 பந்துகளில் 6 சிக்ஸ்கள், ஒரு பவுண்டறி அடங்கலாக 43 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

மறுபக்கத்தில் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய இப்ராஹிம் ஸத்ரான் 41 பந்துகளில் 42 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 33 பந்துகளில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்து ஆப்கானிஸ்தானின் வெற்றியை இலகுவாக்கினர்.
பங்காதேஷைப் போன்றே ஆப்கானிஸ்தானுக்கும் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.
ஆமைவேகத்தில் ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டிருந்த ஆப்கானிஸ்தானின் முதலாவது விக்கெட் 5ஆவது ஓவரின் முதல் பந்தில் வீழ்ந்தபோது அதன் மொத்த எண்ணிக்கை 15 ஓட்டங்களாக இருந்தது.
இலங்கைக்கு எதிரான ஆரம்பப் போட்டியில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ரஹ்மானுல்லா குர்பாஸ் இப் போட்டியில் 11 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
ஹஸரத்துல்லா ஸஸாய், இப்ராஹிம் ஸத்ரான் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 30 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைக் கட்டியெழுப்ப முயற்சித்தனர்.

ஆனால், ஹஸரத்துல்லா ஸஸாய் 23 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததுடன் சொற்ப நேரத்தில் அணித் தலைவர் மொஹமத் நபி 8 ஓட்டங்களுடன் களம் விட்டு வெளியேறினார்.
அதன் பின்னர் ஓட்டங்கள் பெறுவதில் சிரமத்தை எதிர்கொண்ட ஆப்கானிஸ்தான், 16 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்களை இழந்து 85 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.
ஆனால், அடுத்த 2 ஓவர்களில் முறையே 17 ஓட்டங்களையும் 22 ஓட்டங்களையும் குவித்த ஆப்கானிஸ்தான், 19ஆவது ஓவரின் 3ஆவது பந்தில் வெற்றி இலக்கை அடைந்தது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ் 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 127 ஓட்டங்களைப் பெற்றது.
6ஆம், 7ஆம் விக்கெட்களில் ஏற்படுத்தப்பட்ட சிறப்பான இணைப்பாட்டங்களே பங்களாதேஷ் சுமாரான மொத்த எண்ணிக்கையைப் பெற உதவியது.
பங்களாதேஷின் முன்வரிசை துடுப்பாட்டம் சிறப்பாக அமையாததுடன் பவர் ப்ளே பூர்த்திசெய்யப்பட்டபோது அவ்வணி 3 விக்கெட்களை இழந்து 23 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.
10 ஓவர்கள் நிறைவில் பங்களாதேஷின் மொத்த எண்ணிக்கை வெறும் 50 ஓட்டங்களாக இருந்ததுடன் 4 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டிருந்தது. மொஹம்மத் நய்ம் (6), அனாமுள் ஹக் (5), அணித் தலைவர் ஷக்கிப் அல் ஹசன் (11), முஷ்பிக்குர் ரஹிம் (1) ஆகிய நால்வரும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினர்.
11ஆவது ஓவரில் அபிவ் ஹொசெய்ன் 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தபோது மொத்த எண்ணிக்கை 53 ஓட்டங்களாக இருந்தது.
ஆனால், 6ஆவது விக்கெட்ல் மஹ்முதுல்லாவுடன் 36 ஓட்டங்களையும் 7ஆவது விக்கெட்டில் மெஹெதி ஹசனுடன் 38 ஓட்டங்களையும் மொஸாடெக் ஹொசெய்ன் பகிர்ந்து பங்களாதேஷை கௌரவமான நிலையில் இட்டார்.
மஹ்முதுல்லா 25 ஓட்டங்களையும் மெஹெதி ஹசன் 14 ஓட்டங்களையும் பெற்றதுடன் மொசாடெக் ஹொசெய்ன் 31 பந்துகளில் 48 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் முஜீப் உர் ரஹ்மான் 4 ஓவர்களில் 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ராஷித் கான் 4 ஓவர்களில் 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM