நிவாரணம் வழங்குவதாக தெரிவித்து ஜனாதிபதி மக்களை ஏமாற்றியுள்ளார் -  விஜித்த ஹேரத்

Published By: Digital Desk 4

31 Aug, 2022 | 07:01 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)

வட் வரி அதிகரிபை 15வீதம் வரை அதிகரித்துள்ளதால் பொருட்களின் விலை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கும்.  நிவாரணம் வழங்குவதாக தெரிவித்து ஜனாதிபதி மக்களை ஏமாற்றியுள்ளார் என மக்கள் விடுதலை முன்னணி உறுப்பிப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (30) நிதி அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவு திட்ட அறிக்கை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்ப்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வட் வரி 12 வீதத்தில் இருந்து 15 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது அனைத்து மக்களையும் பாதிக்கும். இது மறைமுக வரி என்பதனால் அனைத்துப் பொருட்களின் விலைகளும் மேலும் அதிகரி்க்கும் நிலை ஏற்பட்டுன்னது.

உணவு, மருந்து என்று அனைத்து பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படும் போது சாதாரண மக்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள். இவ்வாறு வரி மூலம் மக்களிடம் இருந்து சுரண்டிவிட்டு, நிவாரணங்கள் என்ற பெயரில் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். இதனால் செலவும், கடனும் அதிகரிக்கப்படும்.

அத்துடன் இடைக்கால வரவு செலவு திட்டத்திலும் பாதுகாப்புக்கு அதிகளவில் ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 11.46 வீதம் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால் சுற்றுலாத்துறை, விவசாயத் துறை, கைத் தொழில் ஆகியவற்றுக்கு 4.3 வீதமே ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதென்றால் இவற்றுக்கே அதிகளவில் ஒதுக்க வேண்டும்.

ஆனால் மீண்டும் துப்பாக்கி குண்டுகளுக்கும், கண்ணீர் புகை குண்டுகளுக்கும், அமைச்சர்கள், ஜனாதிபதிகளின் பாதுகாப்புகளுக்காகவுமே அதிகளவில் ஒதுக்கப்பட்டிருக்கின்றது.

நாட்டில் யுத்தம் இல்லாது உள்ள நேரத்தில் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்காகவே அதிகளவில் ஒதுக்க வேண்டும். அதனை செய்யாது இவர்கள் அதிகாரத்தை பாதுகாக்கவே முயற்சித்துள்ளனர். அதனால் ஜனாதிபதி நிவாரணம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி இருக்கின்றார் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் சர்வதேச தரத்திலான இரு மைதானங்கள்...

2024-04-12 21:41:41
news-image

ஞானசாரருக்கு நாளை விடுதலை இல்லை!

2024-04-12 21:00:04
news-image

புதுக்குடியிருப்பில் நீரில் மூழ்கி குடும்பஸ்தர் பலி...

2024-04-12 18:49:17
news-image

அண்ணனின் தாக்குதலில் தம்பி உயிரிழப்பு :...

2024-04-12 18:36:53
news-image

காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

2024-04-12 18:22:35
news-image

இலங்கையின் தெற்கே ஆழ்கடலில் 200 கிலோ...

2024-04-12 17:53:23
news-image

கொவிட் தொற்றினால் குருணாகல் வைத்தியசாலையில் ஒருவர்...

2024-04-12 17:36:50
news-image

இலங்கையுடனான பாதுகாப்பு இராஜதந்திரத்தை தீவிரப்படுத்தும் இந்தியா...

2024-04-12 09:10:18
news-image

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய...

2024-04-12 16:57:02
news-image

யாழில் இடம்பெற்ற விபத்தில் தொழில் வழிகாட்டல்...

2024-04-12 16:50:32
news-image

ஜூலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு -...

2024-04-12 08:58:25
news-image

'சிறுவர் இல்லங்களிலுள்ள சிறுவர்களுக்கு புத்தாண்டு'  -...

2024-04-12 08:51:18