(எம்.மனோசித்ரா)
பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரண கொடுப்பனவை வழங்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் சிறந்ததாகும்.
எனினும் அதனை சமூர்த்தி ஊடாக வழங்கக் கூடாது. காரணம் தற்போது சமூர்த்தி வேலைத்திட்டம் முழுமையாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை (30) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
ஜனாதிபதியினால் இடைக்கால வரவு - செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட போது அழகிய கதை கூறப்பட்டது. இதன் போது பல்வேறு குழுக்களை நியமிப்பதாகவும் அவற்றுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
எனினும் வருமானத்தை அதிகரிப்பதற்கான வழிமுறை தொடர்பில் எதுவும் கூறப்படவில்லை. வட் வரி 12 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது சிறந்த தீர்மானமாகும். வரி குறைப்புக்களும் நாட்டின் பொருளாதாரம் இந்தளவு வீழ்ச்சியடைவதில் பாரிய தாக்கத்தினை செலுத்துகிறது.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது எம்மால் முன்வைக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் இந்த இடைக்கால வரவு - செலவு திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன.
ராஜபக்ஷாக்களால் எடுக்கப்பட்ட பல்வேறு தவறான தீர்மானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. தேசிய கடன் மறுசீரமைப்பு அலுவலகத்தை ஸ்தாபிக்கவுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள யோசனையும் நல்லாட்சி அரசாங்கத்தில் எம்மால் பரிந்துரைக்கப்பட்ட யோசனையாகும்.
பணவீக்கம் பாரியளவில் உயர்வடைந்துள்ள இந்த சந்தர்ப்பத்திலேயே இந்த வரவு - செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் கடினமான காலகட்டமாகும்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரண தொகையை வழங்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் சிறந்ததாகும். எனினும் அதனை சமூர்த்தி ஊடாக வழங்கக் கூடாது.
காரணம் சமூர்த்தி திட்டம் தற்போது முழுமையாக அரசியல் மயப்பட்டுள்ளது. எனவே குறைந்த வருமானம் பெறுபவர்களின் பட்டியலை தயாரித்து அவர்களுக்கு நேரடியாக இந்த கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM