ரஸ்யாவில் தொடர்ந்தும் செயற்படும் நிறுவனத்திற்கு எதிராக அவுஸ்திரேலியாவில் ஆர்ப்பாட்டம்

Published By: Rajeeban

30 Aug, 2022 | 12:24 PM
image

ரஸ்யாவுடன் தொடர்ந்தும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அட்லாசியா நிறுவனத்திற்கு எதிராக அவுஸ்திரேலியாவில் ஆர்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

சிட்னியில் உள்ள அட்லாசியா நிறுவனத்தின் முன்னால் உக்ரைன் ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

பாரிய தொழில்நுட்ப நிறுவனம் ரஸ்யாவுடனான உறவுகளை துண்டிக்கவேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசங்களை எழுப்பினர்.

உக்ரைன் மக்கள் இறக்கினர் உங்கள் நிறுவனம் வளர்ச்சியடைகின்றது  ரஸ்யாவுடனான உறவுகளை துண்டியுங்கள் போன்ற வாசகங்கள் காணப்பட்ட பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் வைத்திருந்தனர்.

ரஸ்யா யுத்த குற்றங்களில் ஈடுபடுகின்றது என்பது அனைவருக்கும் தெரிந்துள்ள போதிலும் இந்த நிறுவனம் ஏன் ரஸ்யாவுடன் உறவுகளை தொடர்கின்றது  அட்லாசிய பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கின்றது போன்ற பதாகைகளையும் காணமுடிந்தது.

பாரிய தொழில்நுட்ப நிறுவனமான அட்லாசியாவிற்கு எதிராக அதன் தலைமை அலுவலகத்தின் முன்னால் இந்த மாதம் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவது இது இரண்டாவது தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

சிறிய அளவில் தொடர்ந்தும்ரஸ்யாவில் செயற்படுவோம் என அந்த நிறுவனம்அறிவித்துள்ளதை தொடர்ந்து அந்த நிறுவனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32