செரெண்டிப் , கிறிஸ்டல் பெலஸ் ஆகிய கழகங்களுக்கு இடையிலான போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவு

Published By: Vishnu

30 Aug, 2022 | 12:25 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் நடத்திவரும் சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட சுற்றின் 11ஆம் கட்டத்தின் இரண்டாம் நாள் போட்டிகளில் சோண்டர்ஸ், மொரகஸ்முல்ல ஆகிய கழகங்கள் இறுக்கமான வெற்றிகளை ஈட்டியதுடன் செரெண்டிப் மற்றும் கிறிஸ்டல் பெலஸ் ஆகிய கழகங்களுக்கு இடையிலான போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற சம்பியன்ஸ் லீக் போட்டி ஒன்றில் சோண்டர்ஸ் கழகத்திடம் 2 - 3 என்ற கோல்கள் வித்தியாசத்தில் பொலிஸ் கழகம் தோல்வி அடைந்தது.

இந்த வருட சம்பியன்ஸ் லீக் சுற்றுப் போட்டியில் மிக மோசமாக விளையாடி வரும் பொலிஸ் கழகம் அடைந்த 8ஆவது தோல்வி இதுவாகும்.

இப் போட்டியில் மிகத் திறமையாக விளையாடிய பொலிஸ் கழகம் 13ஆவது நிமிடத்தில் பத்திரண இரட்டைச் சகோதரர்களில் ஒருவரான தமித் போட்ட கோல் மூலம் முன்னிலை அடைந்தது.

எனினும் 24ஆவது நிமிடத்தில் சுந்தரராஜ் நிரேஷும் 41ஆவது நிமிடத்தில் அணித் தலைவர் இந்தீவர உதாரவும் கோல்கள் போட்டு சோண்டர்ஸ் கழகத்தை முன்னிலையில் இட்டனர்.

இடைவேளையின் பின்னர் 77ஆவது நிமிடத்தில் மாற்றுவீரர் மதுக்க சிறிவர்தன கோல் ஒன்றைப் போட்டு பொலிஸ் கழகத்துக்கு உற்சாகத்தைக் கொடுத்தார்.

எனினும் 84ஆவது நிமிடத்தில் டிலான் டி சில்வா போட்ட கோல் 3 - 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் சோண்டர்ஸ் கழகத்தை வெற்றி அடையச் செய்தது.

மொரகஸ்முல்ல கழகத்திற்கு இறுக்கமான வெற்றி

காலி விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சம்பியன்ஸ் லீக் போட்டியில் நிகம்போ யூத் கழகத்தை 2 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் மொரகஸ்முல்லை கழகம் வெற்றிகொண்டது.

ஆனால், இந்த வெற்றி மொரகஸ்முல்ல கழகத்திற்கு இலகுவாக வரவில்லை.

போட்டியின் 43ஆவது நிமிடத்தில் நிகம்போ யூத் அணித் தலைவர் நிலூக்க ஜனித் கோல் போட்டு தனது அணியை முன்னிலையில் இட்டார்.

இடைவேளையின் பின்னர் மிகத் திறமையாக விளையாடிய மொரகஸ்முல்ல கழகம் 2 கோல்களைப் போட்டு  போட்டி முடிவைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு.

50ஆவது நிடமிடத்தில் டிலான் மதுஷன்கவும் 74ஆவது நிமிடத்தில் நிமல தனஞ்சயவும் கோல்கள் போட்டு மொரகஸ்முல்ல கழகத்தின் வெற்றியை உறுதி செய்தனர்.

செரெண்டிப் கழகத்துக்கு ஏமாற்றம்

செரெண்டிப் கழகத்திற்கும் கிறிஸ்டல் பெலஸ் கழகத்திற்கும் இடையில் குருநாகல் மாளிகாபிட்டி மைதானத்தில் நடைபெற்ற சம்பியன்ஸ் லீக் போட்டி 2 - 2 கோல்கள் கணக்கில் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

இந்த வருட சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டியில் முன்னேற்றத்தை வெளிப்படுத்தி வரும் செரெண்டிப் கழகம் இரண்டாம் இடத்திற்கு குறி வைத்து விளையாடி வருகிறது. ஆனால், இந்தப் போட்டி முடிவு அக் கழகத்திற்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

41ஆவது நிமிடத்தில் அணித் தலைவர் அசன்டே இவேன்ஸ் கோல் போட்டு செரெண்டிப் கழகத்தை முன்னிலையில் இட்டார்.

இடைவெளையின் பின்னர் 2 நிமிட இடைவெளியில் ஸக்கீர் அஹ்மத் (52 நி., 54 நி.) 2 கொல்களைப் போட்டு கிறிஸ்டல் பெலஸ் கழகத்தை முன்னிலையில் இட்டார்.

எனினும் செரெண்டிப் கழகம் 65ஆவது நிமிடத்தில் சார்பாக ரியாஸ் மொஹமத் கோல் நிலையை சமப்படுத்தினார்.

அதன் பின்னர் இரண்டு அணிகளாலும் வெற்றி கோலை போட முடியாமல் போனதால் ஆட்டம் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41