ஊழல்வாதிகளுக்கு அரச வரப்பிரசாதங்கள் கிடைப்பதை மக்கள் எதிர்க்கின்றனர் - வெல்கம ஜனாதிபதிக்கு கடிதம்

Published By: Digital Desk 5

30 Aug, 2022 | 12:29 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஊழல்வாதிகள்,கொலைகாரர்கள்,கொள்ளைகார்கள் மற்றும் அரச நிதியை மோசடி செய்தவர்களுக்கு அமைச்சரவை அமைச்சுக்களை வழங்குவதற்கும், அரச வரபிரசாதங்களை வழங்குவதற்கும் பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். நாட்டு மக்களும் அதே நிலைப்பாட்டில் உள்ளார்கள்.

அரசியல் ரீதியில் நாட்டு மக்கள் தற்போது மிக தெளிவாக உள்ளார்கள்.நாட்டு மக்களின் எதிர்பார்ப்பிற்கமைய அரச நிர்வாகத்தை முன்னெடுத்தால் ஆட்சியில் நிலைத்து நிற்க முடியும் என சுட்டிக்காட்டி பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடந்த இரண்டரை வருட காலத்தில் அரச தலைவரின் தவறான மற்றும் முட்டாள்தனமான தீர்மானங்களினால் நாடும்,நாட்டு மக்களும் மிக மோசமான நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ளமை ஒன்றும் இரகசியமானதொரு விடயமல்ல  உங்களின் வசமுள்ள ,அரசியல் அனுபவம்,சர்வதேச அங்கிகாரம், உண்மை தன்மை ஆகிய சிறப்பம்சங்களினால் பொருளாதார நெருக்கடிக்கு ஒப்பீட்டளவில் தீர்வு காணப்பட்டுள்ளது என்பதை நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

அரசியல் மற்றும் ஏனைய வேறுப்பாடுகளை துறந்து அனைவரும் சர்வக்கட்சி அரசாங்கத்தில் ஒன்றிணையுமாறு நீங்கள் அழைப்பு விடுத்தீர்கள்.

மனிதர்களின் அடிப்படை கடமை,மனிதர்களுக்கு சேவை புரிவது என்ற எமது கட்சியின் அடிப்படை கொள்கைக்கமைய நாட்டையும்,நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க தீர்மானித்தோம்.

மக்களால் கடுமையாக வெறுக்கப்படும் தரப்பினருக்கு அமைச்சு பதவிகளை வழங்குமாறு ஆளும் தரப்பினரால் உங்களுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக ஊடகங்களில் வெளியாகிய செய்திகள் ஊடாக அறிய முடிந்தது.இத்தருணத்தில் அரசியல் சூழ்ச்சி முன்னெடுக்கப்படுவதை விளங்கிக்கொள்ள முடிகிறது.

பொருளாதார மீட்சிக்கான கொள்கை திட்டங்களை செயற்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானங்களை  இல்லாதொழிக்கும் முயற்சிகள் ஒருதரப்பினரால் எடுக்கப்படுகிறது.

ஊழல்வாதிகள், கொலைகாரர்கள், கொள்ளைகார்கள அரச நிதி மோசடியாளர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.நாட்டு மக்களும் அதே நிலைப்பாட்டில் உள்ளார்கள்.

நாட்டு மக்கள் அரசியல் ரீதியில் தற்போது மிக தெளிவாக உள்ளார்கள்.பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

மக்களால் புறக்கணிக்கப்படும் அல்லது கடுமையாக விமர்சனத்திற்குள்ளான தரப்பினருக்கு அரசியல் ரீதியில் எவ்வித வரபிரசாதங்களையும் வழங்க கூடாது.சட்டவாட்சி கோட்பாட்டிற்கமைய அரச நிர்வாகத்தை முன்னெடுக்குமாறு வலியுறுத்துகிறோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உமா ஓயா திட்ட பணிகளின் தாமதத்தினால்...

2024-04-20 12:02:11
news-image

முதன்முறையாக தேர்தலில் வாக்களித்ததால் இலங்கை தமிழ்...

2024-04-20 11:53:28
news-image

வாழைச்சேனையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர்...

2024-04-20 12:04:32
news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15