ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் இருக்கும் மொசூல் பகுதியை மீட்கும் நடவடிக்கையில் ஈராக் இராணுவம், குர்தீஷ் இன பெஷ்மெர்கா படையினர், சன்னிபிரிவு அரேபிய மலைவாழ் இன வீரர்கள் மற்றும் ஷியா அமைப்பு ஆகியன இணைந்து மேற்கொண்டுள்ளன.

இதன் போது மொசூல் புறநகர் பகுதியிலுள்ள குடியிருப்பொன்றில் குர்தீஷ் இன பெஷ்மெர்கா படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது ஜ.எஸ். தீவிரவாதத்தை சேர்ந்த ஒருவர் சரணடையும் காட்சி இணையத்தளத்தில் பரவி வருகின்றது.

குர்தீஷ் இன பெஷ்மெர்கா படையினர் சுற்றிவளைத்த போது குறித்த தீவிரவாதி தன் கைகளை தலைமேல் உயர்த்தியவாறு அச்சத்துடன் முன்வருகின்ற காட்சி படமாக பிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சரணடைந்த தீவிரவாதியிடம், சுற்றிவளைக்கும் இடத்தில் வேறு தீவிரவாதிகள் உள்ளனரா? என படையினர் கேள்வியெழுப்பியதற்கு, பதிலளித்த ஐ.எஸ்.தீவிரவாதி, இன்னும் மூன்று அல்லது நான்கு பேர் உள்ளே இருப்பதாகவும், அவர்கள் உயிருடன் இருக்கின்றனர், அவர்களுக்கு சரணடைவதில் உடன்பாடு இல்லையென தெரிவித்துள்ளார்.