சருமப் பராமரிப்பு தொடர்பான ஒட்டுமொத்த சிகிச்சைகளையும் வழங்குவதில் இலங்கையில் முன்னிலை வகித்துவருகின்ற Christell சரும சிகிச்சை நிலையமானது இலங்கையில் முதற்தடவையாக தழும்புகளை உருமறைப்புச் செய்யும் நவீன சிகிச்சையை அறிமுகப்படுத்தி, சருமப் பராமரிப்பில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து, விளையாட்டின் போது ஏற்படும் காயம், தீக்காயம், வரித் தழும்புகள், தையல் வடுக்கள் மற்றும் அதையொத்த ஏனைய காரணங்களால் அனைவரும் தமது வாழ்வில் ஏதோ ஒரு தருணத்தில் தழும்பு அடையாளங்களை தேடிக்கொள்கின்றனர். மக்களில் சிலர் இந்த தழும்புகளுடன் வாழ்வதற்கு பழகிக்கொண்டாலும், தமது வெளிப்புறத் தோற்றத்தில் அது ஏற்படுத்தும் விளைவு தொடர்பில் பலரும் அக்கறை கொண்டுள்ளனர். இந்த தழும்புகள் கால ஓட்டத்தில் மங்கி, மறைந்து போயினும், முகம், கழுத்து, அல்லது கைகள் போன்ற வெளித்தெரியும் உறுப்புக்களில் அவை நிரந்தரமாக நிலைத்திருக்க வாய்ப்புள்ளது.
அதேசமயம், சருமப்படையில் நிறமூட்டல் ஏற்படுவதன் காரணமாக நீண்ட காலப் போக்கில் சருமத்தைப் பாதிக்கின்ற Vitiligo என அழைக்கப்படுகின்ற சரும வியாதியாலும் சிலர் பாதிக்கப்படுகின்றனர். இந்நோயுடன் வாழ்கின்றவர்கள் உடல்ரீதியாகவும், உணர்வுரீதியாகவும் பாரிய அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். இத்தகைய தழும்புகளை உருமறைப்புச் செய்வதற்கு நிரந்தரமான முறை ஒன்று இல்லாவிடினும், மேக்-அப் அல்லது மறைத்தல் போன்ற தற்காலிக முறைமைகளை பலரும் கைக்கொள்கின்றனர்.
மேற்குறிப்பிட்ட இரு முறைமைகளிலும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான தெரிவுகளே இது வரை காணப்பட்டன. தழும்புகளை அகற்றும் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படும் போதும், தழும்புகள் சிறிதளவு தொடர்ந்தும் வெளித்தெரியும் நிலைமையே அனேகமாக ஏற்படுகின்றது. எனினும் Christell சரும சிகிச்சை நிலையத்தின் “மருத்துவ உரு மறைப்பு” சிகிச்சை முறையானது தழும்புகளுக்கான சிகிச்சை முறையை பெருமளவில் மாற்றியமைத்துள்ளது.
கொழும்பு 4 இல் அமைந்துள்ள நவீன வசதி கொண்ட சிகிச்சை நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய நுட்பமானது எவ்விதமான தழும்புகளையும் மூன்று வருடங்கள் வரை உருமறைப்புச் செய்வதற்கு உபயோகிக்கப்பட முடியும். மேலும் எந்த நிறத்திலான சருமத்திற்கும் மற்றும் உடலின் எப்பகுதியிலும் இதனை மேற்கொள்ள முடியும். சர்வதேசரீதியாக முயற்சி செய்யப்பட்டு, பரிசோதிக்கப்பட்டுள்ள இச்சிகிச்சை முறையானது, சிகிச்சை நிலையத்தில் ஒவ்வாமை அல்லாத நிறமூட்டல்கள் மட்டுமே உபயோகிக்கப்படுவதால் எந்த நோயாளியாலும் செய்யப்படக்கூடியது.
ஒப்பனை மருத்துவ நிபுணர்கள், பயிற்றுவிக்கப்பட்ட மருத்துவ பணியாளர்கள், ஒப்பனையியல் பேராசிரியர், சருமப் பராமரிப்பு, தலைமுடி மற்றும் அழகுக்கலை ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்ற ஒப்பனையாளர்கள் ஆகியோரைக் கொண்ட ஒரு அணியுடன் 2014 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட Christell சரும சிகிச்சை நிலையமானது குறுகிய காலத்தில் மிகவும் பிரபலமடைந்துள்ளது.
Christell சரும சிகிச்சை நிலையத்தில் அனைத்து சிகிச்சைகளும் மருத்துவர் ஒருவரின் மேற்பார்வையின் கீழ் இடம்பெறுவதுடன், அவை அனைத்தும் பயிற்றுவிக்கப்பட்ட பணியாளர்கள் மற்றும் ஒப்பனையாளர்களினால் முன்னெடுக்கப்படுகின்றன. நீங்கள் சிறப்பாகத் தோற்றமளிப்பதற்கும், சிறந்த உணர்வைப் பெற்றுக்கொள்வதற்கும் மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்ட நம்பகமான சிகிச்சை முறைகளைப் பெற்றுக்கொள்ள விரும்பினால் - 0115841932ஃ0112508735ஃ0769 288 244 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் மூலமாகவோ அல்லதுwww.christellskin.com என்ற எமது இணையத்தளத்தை பார்ப்பதன் மூலமாகவோ Christell சிகிச்சை நிலையத்தை தொடர்பு கொள்ள முடியும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM