சுப்பர் 4 வாய்ப்பை குறிவைத்து பங்களாதேஷுடன் நாளை மோதுகிறது ஆப்கானிஸ்தான்

By Vishnu

29 Aug, 2022 | 07:23 PM
image

(நெவில் அன்தனி)

துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட் ஆரம்பப் போட்டியில் முன்னாள் சம்பியன் இலங்கையை துவம்சம் செய்த ஆப்கானிஸ்தான் மற்றொரு வெற்றியையும் சுப்பர் 4 வாய்ப்பையும் குறிவைத்து ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் நாளை (30) இரவு நடைபெறவுள்ள பங்களாதேஷுடனான போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.

இந்தப் போட்டி சர்வதேச இருபது 20 கிரிக்கெட் அரங்கில் அதிகூடிய விக்கெட்களை வீழ்த்தியோர் வரிசையில் முதல் மூன்று இடங்களுக்குள்   இருக்கும் ஷக்கிப் அல் ஹசனுக்கும் ராஷித் கானுக்கும் இடையிலான போட்டியாக அமையும் என கருதப்படுப்படுகிறது.

ஆரம்பப் போட்டியில் இலங்கையை 5 விக்கெட்களால் வெற்றிகொண்ட ஆப்கானிஸ்தான், இன்றைய போட்டியிலும் வெற்றி பெறுவதற்கு அனுகூலமான அணியாக காணப்படுகிறது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நேற்றைய தினம் கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்திய போட்டியைப் போன்று ஆப்கானிஸ்தானுக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான இன்றைய போட்டியும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேகப்பந்துவீச்சாளர்களான பஸால்ஹக் பாறூக்கி, நவீன் உல் ஹக் ஆகிய இருவரும் மிகத் திறமையாக பந்துவீசி இலங்கையின் முதல் 3 துடுப்பாட்ட வீரர்களை 5 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கச் செய்து ஆப்கானிஸ்தானுக்கு நம்பிக்கை ஊட்டியிருந்தனர்.

இந்த வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்கு பெரிதும் தடுமாறிய இலங்கையை இறுதியில் 8 விக்கெட்களால் ஆப்கானிஸ்தான் இலகுவாக வெற்றிகொண்டிருந்தது.

அப் போட்டியில் ஆரம்ப வீரர்களான ஹஸரத்துல்லா ஸஸாய் , ரஹமானுல்லா குர்பாஸ் ஆகிய இருவரும் பவர் ப்ளே ஓவர்களில் 83 ஓட்டங்களைக் குவித்து ஆப்கானிஸ்தானுக்கு அதிரடி ஆரம்பத்தை இட்டுக்கொடுத்து வெற்றியை இலகுபடுத்தியிருந்தனர்.

அதேபோன்றதொரு வெற்றியை பங்களாதேஷுக்கு எதிரான போட்டியிலும் ஆப்கானிஸ்தான் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபுறத்தில் பங்களாதேஷின் அண்மைக்கால பெறுபெறுகள் திருப்திகரமாக இல்லை. இந்த வருடம் விளையாடியுள்ள 8 இருபது 20 போட்டிகளில் 2இல் மாத்திரமே பங்களாதேஷ் வெற்றியீட்டியுள்ளது.

அத்துடன் ஆப்பகானிஸ்தானுக்கு எதிராக இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் பங்களாதேஷ் 3இலும் ஆப்கானிஸ்தான் 5 இலும்  வெற்யீட்டியுள்ளன.

இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறும் ஷார்ஜா ஆடுகளும் பொதுவாக சுழல்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளதை எடுத்துக்காட்டுவதால் இன்றைய போட்டி சுழல்பந்துவீச்சாளர்களுக்கு இடையிலான போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக சர்வதேச இருபது 20 கிரிக்கெட் அரங்கில் அதிக விக்கெட்களை வீழ்த்தியுள்ளோர் வரிசையில் 121 விக்கெட்களுடன் முதலிடத்தில் இருக்கும் பங்களாதேஷ் அணித் தலைவர் ஷக்கிப் அல் ஹசனுக்கும் 112 விக்கெட்களுடன் 3 ஆம் இடத்தில் இருக்கும் ராஷித் கானுக்கும் இடையிலான போட்டியாக இந்தப் போட்டி அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

அணிகள் (பெரும்பாலும்)

ஆப்கானிஸ்தான்: ஹஸ்ரத்துல்லா ஸஸாய், ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான், நஜிபுல்லா ஸத்ரான், கரிம் ஜனத், மொஹம்மத் நபி (தலைவர்), ராஷித் கான், அஸமத்துல்லா ஓமர்ஸாய், நவீன் உல் ஹக், முஜீப் உர் ரஹ்மான், பஸால்ஹக் பாறூக்கி.

பங்களாதேஷ்: மொஹம்மத் நய்ம், அனாமுல் ஹக், ஷக்கிப் அல் ஹசன் (தலைவர்), அபிப் ஹொசெய்ன், முஷ்பிக்குர் ரஹ்மான், மஹ்முதுல்லா, ஷபிர் ரஹ்மான், மெஹெதி ஹசன், மொஹம்மத் சபியுதின், நசும் அஹ்மத், முஷ்தாபிஸுர் ரஹ்மான்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் கொரியாவை வென்றது கானா

2022-11-28 21:06:20
news-image

ஓர் ஓவரில் 7 சிக்ஸர்கள் அடித்து...

2022-11-28 18:24:31
news-image

சேர்பியா - கெமறூன் போட்டி வெற்றிதோல்வியின்றி...

2022-11-28 18:06:08
news-image

உலகக் கிண்ண கிரிக்கெட் 2023 :...

2022-11-28 17:14:53
news-image

இலங்கை கிரிக்கெட்டின் 3 வீரர்கள் திருமண...

2022-11-28 16:56:51
news-image

ஜேர்மனிய முன்னாள் வீரரின் படத்துடன் வாய்...

2022-11-28 15:27:48
news-image

பிரேஸில், சுவிட்சர்லாந்து, போர்த்துக்கல், உருகுவே ஆகிய...

2022-11-28 13:56:49
news-image

அடுத்த 5 வருடங்களில் ஆப்கான் நடத்த...

2022-11-28 13:33:39
news-image

மில்ரோய் பெரேரா ஞாபகார்த்த கால்பந்தாட்டம் :...

2022-11-28 14:41:22
news-image

கால்பந்தாட்ட வீரர் மெஸியின் ஆட்டத்தை நேரில்...

2022-11-28 13:03:16
news-image

மொரோக்கோவிடம் பெல்ஜியமடைந்த தோல்வியின் எதிரொலி பிரஸெல்ஸில்...

2022-11-28 10:05:55
news-image

ஜேர்மனி - ஸ்பெய்ன் வெற்றிதோல்வியின்றி முடிவு...

2022-11-28 09:24:21