ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் 49 சதவீதப் பங்குகள், நிர்வாகத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்க நடவடிக்கை - நிமல் சிறிபால டி சில்வா

Published By: Digital Desk 4

29 Aug, 2022 | 04:44 PM
image

(எம்.மனோசித்ரா)

ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் 49 சதவீதப் பங்குககளை, அதன் நிர்வாக நடவடிக்கைகளையும் மற்றும் விமான நிலைய நடவடிக்ககைளில் 49 சதவீதப் பங்கினையும் அதன் நிர்வாக நடவடிக்கைகளையும் முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைக்கும் திட்டத்திற்கமையவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில் இன்று திங்கட்கிழமை அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் ,

ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனம் தற்போது ஓரளவு இலாபமீட்டுகின்றது. இந்நிறுவனத்தின் 49 சதவீத பங்குகள் மற்றும் அதன் நிர்வாக நடவடிக்கையை முதலீட்டாளர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் இதனை அதிகரித்து கோருமிடத்து அவர்கள் கோரும் பங்கிளை வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்படும்.

இதன் மூலம் அவர்களிடமிருந்து குறிப்பிட்டவொரு தொகை அறவிடப்படும். இதன் மூலம் ஏற்கனவே பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள கடன்களை மீள செலுத்த முடியும். இதன் ஊடாக ஸ்ரீலங்கன் விமான சேவையின் கடன் தொகை ஓரளவு குறைவடையும். அத்தோடு வருடத்திற்கு சுமார் 50 மில்லியன் வருமானத்தையும் பெற்றுக் கொள்ள முடியும்.

இவ்வாறான மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் மூலம் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படவுள்ள 49 சதவீதத்தின் ஊடாக குறிப்பிட்டளவு வருமானத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். இவ்வாறு கிடைக்கப் பெறும் வருமானத்தின் மூலம் ஸ்ரீலங்கன் விமான சேவையை முற்றாக கடன் சுமையிலிருந்து மீட்பதே எமது இலக்காகும் என்றார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் தாதியர்கள்...

2025-03-17 16:00:41
news-image

'வெலே சுதா'வின் சகோதரன் 'தாஜூ' கைது!

2025-03-17 15:35:07
news-image

சிவப்பிரகாசம் காண்டீபன் இலங்கைத் தமிழரசுக் கட்சியிலிருந்து...

2025-03-17 15:30:37
news-image

மட்டக்களப்பில் உள்ளூராட்சி அதிகார சபை தேர்தலுக்கு...

2025-03-17 15:43:38
news-image

குருநாகலில் சேவல் சின்னத்தில் களமிறங்கும் இலங்கை...

2025-03-17 15:28:13
news-image

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் தாதியர்கள் பதாகைகளை...

2025-03-17 15:05:13
news-image

பெண் வைத்தியர் மீது பாலியல் துஷ்பிரயோகம்...

2025-03-17 14:53:47
news-image

இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிக்க சாதாரண...

2025-03-17 14:42:32
news-image

நுவரெலியாவில் அரச தாதியர் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு

2025-03-17 13:43:35
news-image

பல்லேகமவில் வெளிநாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

2025-03-17 13:10:27
news-image

சொகுசு வாகனம், வெடி பொருட்களுடன் விமானப்படை...

2025-03-17 13:44:53
news-image

ரஷ்ய சுற்றுலா பயணி தவறவிட்ட பயணப்...

2025-03-17 12:59:44