கேரள கஞ்சா, ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது

Published By: Vishnu

29 Aug, 2022 | 04:21 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

நாட்டின் இருவேறு பகுதிகளில் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளின் கேரள கஞ்சா மற்றும் ஐஸ் போதைப் பொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பேசாளை

பேசாளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது வீடொன்றில் ஐஸ் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

மேலும் இதன்போது  சந்தேகநபர்களிடமிருந்து 51 கிராம் 50 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்கள் 27 மற்றும் 30 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் கிண்ணியா மற்றும் பளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்கள்.

சந்தேகநபர்கள் மன்னார் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் பேசாளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

கிருலப்பனை

கிருப்பலனை -பொல்ஹேன்கொட பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 6 கிலோ 135 கிராம் நிறையுடைய கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 37 வயதுடைய வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் அவர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

சம்பவம் தொடர்பில் கிருலப்பனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11