மே 9 வன்முறைகளுடன் தொடர்புடைய மூவர் கைது

Published By: Vishnu

29 Aug, 2022 | 04:20 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

மே 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகளுடன் தொடர்புடைய மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த மே 9 ஆம் திகதி இடம்பெற்ற அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் பின்னர் நடைபெற்ற வன்முறைகளின் போது பாராளுமன்ற உறுப்பினர்களான லசந்த அலகியவன்ன, விமல் வீரவன்ச மற்றும் அருந்திக்க பெர்ணாண்டோ ஆகியோரின் வீடுகள், வாகனங்கள் மற்றும் காரியாலங்கள் உட்பட  சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் சந்தேக நபர்கள்  மூவர்  கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

மாலம்பே,தங்கொட்டுவ மற்றும் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்டவர்கள் 37, 43, 45 வயதுகளுடையவர்கள் எனவும் அவர்கள் ஹொகந்துர, கிரிந்திவெல மற்றும் தங்கொட்டுவ பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி பதவி இராஜினாமா...

2023-09-30 08:43:23
news-image

முல்லைத்தீவு நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை...

2023-09-30 08:38:16
news-image

மழையுடனான வானிலை தொடரும்...

2023-09-30 06:56:26
news-image

இலங்கையை ஏழ்மை நிலையில் இருந்து மீட்க...

2023-09-30 07:16:05
news-image

வெளிநாட்டுக் கடன்களை செலுத்த அரசாங்கத்திடம் முறையான...

2023-09-29 18:00:41
news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் :...

2023-09-29 18:12:17
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க கோரிக்கை -...

2023-09-29 17:32:16
news-image

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து...

2023-09-29 19:51:05
news-image

கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் இலங்கையின்...

2023-09-29 18:08:21
news-image

மண்சரிவு, வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை !

2023-09-29 18:05:20
news-image

எனது உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை...

2023-09-29 19:21:38
news-image

ரணில் செய்யமாட்டார் என்றனர் ; செய்விக்கலாம்...

2023-09-29 17:25:08