பேக்கரிகள் யாழில் மூடப்படும் அபாய நிலை ; வெதுப்பக உற்பத்தியாளர் சங்க தலைவர்

By T. Saranya

29 Aug, 2022 | 08:59 PM
image

யாழில் எதிர்வரும்  நாட்களில் பேக்கரிகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்க தலைவர் க.குணரட்ணம் தெரிவித்தார்.

யாழ் மாவட்ட பேக்கரி உற்பத்தியாளர்களின் நிலைமை தொடர்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்

இன்று மாவின் விலை அதிகரித்துவிட்டது அதற்கான காரணம் மாவுக்கான நிர்ணயிக்கப்பட்ட விலை இல்லை  விலைநிர்ணயம்  இல்லாத காரணத்தினால் இஷ்டப்படி மாவின் விலை  ஏற்றப்படுகின்றது

பாணிண் விலையும்அதிகரித்து கொண்டிருக்கின்றது இன்று வரை இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட வெதுப்பகங்கள் கொழும்பில் மூடப்பட்டுள்ளன ஏனென்றால் கொழும்பில் மா இல்லை விலையேற்றம் ஆனால் யாழ்ப்பாணத்தில் மா இல்லை தற்பொழுது நாங்கள் மாவினை எவ்வாறு பெறுவது தொடர்பில்  ஆலோசித்துக் கொண்டிருக்கின்றோம்

மா விலை  பற்றி நுகர்வோர் பாவனையாளர் அதிகார சபையினர் அமைச்சுகளில் இருந்து  கதைக்கவில்லை ஆனால் முட்டைவிலை  பற்றி மாத்திரம் கதைத்து கொண்டிருக்கின்றார்கள்

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஒரு கிலோமா  360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது இனி எதிர்வரும் நாட்களில் பாணின் விலை மாவின் விலை கட்டுப்படுத்த முடியாதநிலை ஏற்படும்  உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தினராலும்   விலையேற்றத்தினை கட்டுப்படுத்த முடியாதநிலை யேற்படும்

எதிர்வரும் நாட்களில் பாணின் விலை அதிகரிக்கும் சில வெதுப்பகு உரிமையாளர்கள் பாணின் விலை அதிகரிக்காவிட்டாலும் நிறையினை குறைப்பார்கள்

இதன் காரணமாக முரண்பாடான நிலை ஏற்படும் எனவே பாணிண் உற்பத்தியை தொடர்ச்சியாக  மேற்கொள்வதற்காக அரிசிமாவினை பானுவுடன் கலந்து செய்வதற்கான உக்தியை  கையாண்டு கொண்டிருக்கின்றோம். அது வெற்றி அளிக்கும் பட்சத்தில் 50 க்கு 20என்றஅடிப்படையில்  அரிசிமாவினை கலந்து பாண் உற்பத்திசெய்வதன் மூலம் தங்கு தடை இன்றி பொதுமக்களுக்கு பாண் வழங்க முடியும்

தற்பொழுது முட்டை விலை பற்றி அனைவரும் கதைக்கின்றார்கள். ஆனால் பாண் மற்றும் மாவிலை பற்றி யாரும் கவலைப்பதில்லை.

பேக்கரி  உற்பத்திகளின் சகல மூலப் பொருட்களும் விலேயேறியுள்ளன அதன் காரணமாகத்தான் பாண்  மற்றும் பேக்கறி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரித்துள்ளன.

எந்த கடையிலும் கோதுமை மா இல்லை பிறீமா நிறுவனம் நமக்கு வழங்கிய மாவின் அளவினை தற்பொழுது குறைத்துள்ளது.

பொதுமக்களின் முக்கியமான உணவு பாண் தான்  அதற்கு முதலில் விலை நிர்ணயப் செய்யுங்கள் அதைவிடுத்து விட்டு முட்டையை பற்றி கதைத்துக் கொண்டிருப்பதில் எந்தவித பிரயோசனமும் இல்லை.

யாழ்ப்பாணத்தில் இன்னும் 15 நாட்களில் சகல வெதுப்பகங்களினையும் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது ஆனால் தற்பொழுது இந்தியாவில் வழங்கப்பட்ட மா மூலம் யாழ்ப்பாணத்தில் பேக்கரி உற்பத்தி தக்க வைக்கப்பட்டது ஆனால் இந்த நிலை தொடருமாக இருந்தால்  வரும்  நாட்களில் பேக்கரியினை மூட வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தாயில்லா ஆட்டுக் குட்டிகளுக்கு தாயாக மாறி...

2022-11-30 20:56:56
news-image

3 கிலோ தலைமுடியை உட்கொண்ட சிறுமி...

2022-11-30 11:47:48
news-image

தேவாலயமொன்றின் அனைத்து பிக்குகளும் போதைப்பொருள் சோதனையில்...

2022-11-30 10:17:35
news-image

எகிப்தில் தங்க நாக்கு கொண்ட மம்மிகள்...

2022-11-29 17:30:21
news-image

ஓநாய் போன்று காட்சியளிக்கும் இளைஞன் -...

2022-11-29 14:48:10
news-image

நபரின் வயிற்றிலிருந்த 187 நாணயங்களை அறுவை...

2022-11-29 13:19:19
news-image

அவுஸ்திரேலிய கடற்கரையில் நிர்வாணமாக திரண்ட கூட்டம்...

2022-11-27 15:57:42
news-image

140 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டறியப்பட்ட பறவை...

2022-11-28 09:09:26
news-image

உல்லாசக் கப்பலிலிருந்து கடலில் வீழ்ந்த இளைஞர்...

2022-11-26 19:50:58
news-image

வரலாற்றில் இன்று - மிரபால் சகோதரிகள்...

2022-11-25 13:00:05
news-image

195 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டதாக...

2022-11-24 18:27:49
news-image

 உலகின் வயதான பூனை : கின்னஸ்...

2022-11-24 17:31:12