700 ஆண்­க­ளுடன் பாலியல் உறவில் ஈடு­பட்­ட­தாகக் கூறும் பெண்! தற்­போது குண­ம­டைந்து விட்­ட­தாக தெரி­விப்பு

Published By: Vishnu

29 Aug, 2022 | 11:33 AM
image

அவுஸ்­தி­ரே­லி­யாவைச் சேர்ந்த தொலைக்­காட்சி பிர­ப­ல­மான பெண்­ணொ­ருவர், தான் 700 இற்கும் அதி­க­மான ஆண்­க­ளுடன் பாலியல் உறவில் ஈடு­பட்­ட­தாக தெரி­வித்­துள்ளார்.

ஒரு காலத்தில் பாலி­ய­லுக்கு தான் அடி­மை­யாகிக் கிடந்­த­தா­கவும் எனினும் தற்­போது அதி­லி­ருந்து குண­ம­டைந்­து­விட்­ட­தா­கவும் பெலிண்டா றைஜியர் எனும் இப்பெண் கூறு­கிறார்.

2017 ஆம் ஆண்டில் அவுஸ்­தி­ரே­லி­யாவின் ரியா­லிட்டி தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­யான 'பேச்­சிலர் அவுஸ்திரே­லியா' நிகழ்ச்­சியில் பங்­கு­பற்­றி­யதன் மூலம் புகழ்­பெற்­றவர் பெலிண்டா.

அண்­மையில் வானொலி நிகழ்ச்­சி­யொன்றில் பங்­கு­பற்­றி­ய­போது, தனது கடந்த கால பாலியல் வாழ்க்கை குறித்து பெலிண்டா வெளிப்­ப­டை­யாக பேசி­யுள்ளார்.

தான் பாலில் உறவு கொண்­ட­வர்கின் சரி­யான எண்­ணிக்கை தனக்கு தெரி­யாது எனவும், அனால், அது 700 இற்கும் அதிகம் எனவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

செக்­ஸுக்கு தான் அடி­மை­யா­கி­யி­ரந்­தமை குறித்து பெலிண்டா கூறு­கையில், ' நான் குண­ம­டையும் வரை எனக்கு அப்­பி­ரச்­சினை இருந்­தமை எனக்குத் தெரி­யாது. எனது உறவு முறை­களும். நச்­சுத்­தன்­மை­யான ஆண்­களை நான் ஈர்த்துக் கொண்­டி­ருந்தேன். 

நான் குண­ம­டைந்த பின்னர், எனது கடந்த காலத்தில் குணப்­ப­டுத்­தப்­ப­டாத உள­வியல் அதிர்ச்­சிகள் எனக்கு இருந்­த­தா­கவும், அதுவே நான் பாலி­ய­லுக்கு அடி­மை­யாக கார­ண­மா­கி­யது எனவும் நான் எண்­ணினேன்' என அவர் கூறி­யுள்ளார். 

பாலியல் உற­வுக்­காக ஆண்­களைத் தேடி, வாரத்தில் 6 நாட்­கள்­கூட இரவு விடு­தி­க­ளுக்கு செல்­வதை தான் வழக்­க­மாக கொண்­டி­ருந்­த­தா­கவும் அவர் கூறி­யுள்ளார். 

'அது எனது வாழ்க்­கையை நாச­மாக்­கி­யது. ஒரு சிறந்த தொழிலை நான் கொண்­டி­ருந்தேன்' எனவும் பெலிண்டா தெரி­வித்­துள்ளார்.

தற்­போது பாலியல் அடிமைத் தனத்­தி­லி­ருந்து தான் குண­ம­டைந்­து­விட்­ட­துடன் கடந்த 15 மாதங்­க­ளாக பாலியல் உறவில் தான் ஈடு­ப­ட­வில்லை எனவும் அவர் கூறி­யுள்ளார்.

'இப்­போதும் எனக்கு பாலியல் விருப்பம் உள்ளது. மீண்டும் நான் பாலியல் உறவில் ஈடுபடுவேன், ஆனால், எனக்கு இணைப்பு ஏற்படும் ஒருவருடனேயே பாலியல் உறவில் ஈடுபடுவேன்' என்கிறார் பெலிண்டா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right