(எம்.வை.எம்.சியாம்)
பேலியகொட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் கொகேய்ன் உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் 30 இலட்சம் ரூபா பணத்துடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சந்தேக நபர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பேலியகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நீர்கொழும்பு-பேலியகொட பிரதான வீதியில் பெலியகொட பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப் வண்டி மற்றும் முச்சக்கர வண்டி சோதனையிட்டபோது பயணப் பையில் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்திருந்த நிலையில் 1 கிலோகிராம் கொகேய்ன், 24 கிலோ 500 கிராம் ஹேஷ் போதைப்பொருள் மற்றும் 8 கிலோ கிராம் குஷ் போதைப் பொருட்கள் இதன்போது மீட்கப்பட்டுள்ளது.
மேலதிகமாக சந்தேக நபரிடமிருந்து 30 இலட்சம் பெறுமதியான பணம் உட்பட ஜீப் வண்டி மற்றும் முச்சக்கரவண்டியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் 33,34 மற்றும் 49 வயதுகளுடையவர்கள் எனவும் அவர்கள் வத்தளை மற்றும் நாத்தாண்டிய பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர்.
சம்பவம் தொடர்பில் பெலியகொட பொலிஸார் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM