சட்டவிரோத வெளிநாட்டு பண பரிமாற்றம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க பிரத்தியேக குழு - பொலிஸ்மா அதிபர்

Published By: Digital Desk 5

28 Aug, 2022 | 09:38 PM
image

(எம்.மனோசித்ரா)

சட்ட விரோதமான முறையில் வெளிநாட்டு பண பரிமாற்றத்தில் ஈடுபடுகின்ற நபர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சட்ட விரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப்பிரிவில் பிரத்தியேக குழுவொன்றை நியமிப்பதற்கு பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கி ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

நாட்டில் பொருளாதார நெருக்கடிகள் தீவிரமடைந்துள்ளமைக்கான பிரதான காரணம் டொலர் தட்டுப்பாடாகும் என்று மத்திய வங்கி மதிப்பிட்டுள்ளது. இதற்கான முக்கிய காரணிகள் தொடர்பிலும் மத்திய வங்கி வெளிப்படுத்தியுள்ளது.

அதற்கமைய சட்ட ரீதியான வங்கி முறைமைகளுக்கு அப்பால் உண்டியல் மற்றும் ஹவாலா முறைமை ஊடாக பணப்பறிமாற்றம் இடம்பெறுகின்றமை மற்றும் வெளிநாடுகளிலுள்ள இலங்கை பணியாளர்களினால் வெவ்வேறு அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்காக வங்கி முறைமையின் ஊடாக அன்றி சட்டத்திற்கு முரணான முறைமைகளைக் கையாளுதல் என்பன பிரதான காரணிகளாக மத்திய வங்கியினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

மத்திய வங்கி ஆளுனரின் கோரிக்கைக்கு அமைய மேற்கூறப்பட்ட காரணிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக பொலிஸ்மா அதிபரினால் சட்ட விரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப்பிரிவில் பிரத்தியேக குழுவொன்றை நியமித்து , குறித்த விசாரணை நடவடிக்கைகளை மேலும் பரந்தளவில் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவை தவிர , சட்டத்திற்கு முரணான டொலர் பரிமாற்றத்தினை தடுப்பதற்காக 2006 இல 5 நாணய சுத்தீகரிப்பு சட்டத்தின் 3 மற்றும் 4 ஆம் உறுப்புரைகளில் டொலரைப் பெற்றுக் கொண்ட முறைமையை அறிந்து கொள்வதற்கான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக இலங்கை மத்திய வங்கி அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயற்படுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முஸ்லிம் விவாக விவாகரத்து சட்ட உள்ளடக்கம்...

2025-02-16 10:12:56
news-image

இரத்தினபுரி - குருவிட்ட பகுதியில் கொள்ளையடித்த...

2025-02-16 10:08:34
news-image

இந்திய பிரதமர் மோடியை டெல்லியில் சந்திக்கும்...

2025-02-16 09:48:30
news-image

புதன்கிழமை இலங்கை வரும் இன விவகாரங்களுக்கான...

2025-02-16 09:42:59
news-image

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவது கடினம்...

2025-02-16 09:22:20
news-image

மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்கள் விரைவில் மீட்கப்படுவர்...

2025-02-16 09:13:12
news-image

அனைவருடனும் கலந்துரையாடி புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம்...

2025-02-16 09:11:44
news-image

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை...

2025-02-15 17:53:42
news-image

ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறைக்கான ஆணையை வலுப்படுத்த...

2025-02-15 17:54:48
news-image

சட்டமா அதிபரின் ஆலோசனையை தற்காலிகமாக இடைநிறுத்துவது...

2025-02-15 20:32:09
news-image

இன்றைய வானிலை

2025-02-16 06:19:25
news-image

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின்...

2025-02-15 16:38:58