உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இளைஞர், யுவதிகளுக்கு போட்டியிட வாய்ப்பு - ஜீவன் தொண்டமான்

Published By: Digital Desk 5

28 Aug, 2022 | 06:27 PM
image

(க.கிஷாந்தன்)

நாட்டில் கூடிய விரைவில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இடம்பெற போகின்றது என தெரிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், இந்த தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக அந்தந்த தோட்டப்பகுதியில் உள்ள இளைஞர், யுவதிகளுக்கு போட்டியிட வாய்ப்பளிக்க போவதாகவும் தெரிவித்தார்.

மஸ்கெலியா சாமிமலை மாக்கலை தோட்டத்தில் இரவு பகல் கரப்பந்தாட்ட விளையாட்டு மைதானம் (27) அன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் தலைமையில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

ஜீவன் தொண்டமானின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இந்த மைதானம் புனரமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி தலைவரும், கொட்டகலை பிரதேச சபையின் தலைவருமான ராஜமணி பிரசாந்த், மஸ்கெலியா பிரதேச சபையின் தலைவர் திருமதி.செண்பகவள்ளி,  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணியின் பொது செயலாளர் அர்ஜுன் ஜெயராஜ், இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஜீவன் தொண்டமான் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டில் விரைவில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெறும் என தெரியவந்துள்ளது. அந்த தேர்தலில் பிரதேச மக்களை உள்ளடக்கிய தோட்டப்பகுதி இளைஞர், யுவதிகளை போட்டியிட செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்கள் பாரியளவில் வாக்குகளை அளித்து எங்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்து அமைச்சு பதவிகளை பெற்றுக் கொண்டிருந்தாலும் கூட அரசாங்கத்தில் மக்கள் எதிர்பார்த்த அபிவிருத்திகளை முன்னெடுக்க முடியாது பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டது.

இருந்தாலும், மக்களுக்கு சேவை செய்ய முடியாத அந்த அரசாங்கத்தில் இருந்து நாங்கள் விலகி விட்டோம். எதிர்காலத்தில் நாடு நல்ல ஒரு முன்னேற்றம் அடையும். அதன்போது மக்கள் எதிர்பாரக்கும் அபிவிருத்திகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஊடாக செய்வதற்கான வாய்ப்புகள் கிட்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமல் ராஜபக்‌ஷ தலைமறைவான சித்தப்பாவை அழைத்து...

2026-08-16 12:16:24
news-image

பலாலியில் காணிகளை விடுவிக்கக் கோரி கறுப்பாடை...

2026-08-16 17:14:49
news-image

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை 50...

2026-08-16 17:06:37
news-image

மேல், சப்ரகமுவ உட்பட பல மாகாணங்களில்...

2026-08-16 16:27:46
news-image

ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகைக்கான புதிய விண்ணப்ப மீளாய்வுக்கு...

2026-08-16 16:31:13
news-image

கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் அடையாளம்...

2026-08-16 16:14:05
news-image

சமூக ஊடகங்களில் அவதூறு : குற்றப்புலனாய்வு...

2026-08-16 16:25:53
news-image

கல்கிஸ்ஸை துப்பாக்கிச் சூடு: இலக்கு மாறியதால்...

2026-08-16 15:57:49
news-image

மீரிகமவில் ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர்களில்...

2026-08-16 15:45:29
news-image

கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர்...

2026-08-16 15:38:28
news-image

வவுனியாவில் வீடு உடைத்து பெண் கூட்டு...

2026-08-16 15:31:17
news-image

வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்கவில் இளைஞர் கைது!

2026-08-16 15:23:59