நியூஸிலாந்தின் தெற்கு தீவை சக்தி வாய்ந்த பூமியதிர்ச்சி ஒன்று தாக்கி உள்ள நிலையில், அதனைத்தொடர்ந்து சுனாமி தாக்கியுள்ளது.கிறைஸ்ட்சர்ச்சில் இருந்து சுமார் 95 கிலோமீற்றர் தொலைவில் 7.8 ரிச்டர் அளவில் குறித்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனை தொடர்ந்து, இரு மணி நேரங்கள் கழித்து வட-கிழக்கு கடற்கரையை சுனாமி தாக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.கடற்கரையோரம் வசிக்கும் மக்கள் கடற்கரைக்கு அப்பால் செல்லுமாறும் அல்லது உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.