(எம்.மனோசித்ரா)
கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைவர் பதவிகளை எதிர்க்கட்சிகளுக்கு வழங்குவதற்கு அஞ்சுவதற்கான காரணம் என்ன? இவற்றின் தலைவர்களாக எதிர்க்கட்சியினர் நியமிக்கப்பட்டால் கொள்ளையர்கள் இனங்காணப்படுவார்கள் என்பதற்காகவே பொதுஜன பெரமுனவினர் இதற்கு தடையாகவுள்ளனர் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நிகவரெட்டிய தொகுதிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
தற்போது சர்வகட்சி அரசாங்கம் என்ற புதிய ஏமாற்று வேலைத்திட்டம் தொடர்பில் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த அரசாங்கத்தில் அமைச்சுப்பதவிகளை ஏற்குமாறு எமக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.
ஆனால் எமக்கு அமைச்சுப்பதவிகள் வேண்டாம் என்றும் , பாராளுமன்றத்திலுள்ள பிரதான தெரிவுக்குழுக்களின் தலைவர் பதவியை வழங்குமாறும் வலியுறுத்துகின்றோம்.
இது சிறந்த முறைமையாகும். அதற்கமைய அமைச்சரவை ஒருபுறமும் செயற்பட, எதிர்க்கட்சி மறுபுறம் அந்தக் குழுக்களின் தலைமைத்துவத்தை ஏற்று செயற்படும்.
கடந்த கட்சி தலைவர் கூட்டத்தில் கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைமைத்துவத்தினை எதிர்க்கட்சிக்கு வழங்க இணக்கப்பாடு எட்டப்பட்டது. எனினும் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.
இவர்களின் ஏமாற்று வேலையை இதன் ஊடாக அவதானிக்க முடிகிறது. நிலைமை தீவிரமடைந்த போது , பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து ஜனாதிபதியை தெரிவு செய்தனர்.
சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படும் என்று ஜனாதிபதி கூறுகின்றார். இவ்வாறு கூறிக் கொண்டிருக்கும் அதே சந்தர்ப்பத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேசசபை மற்றும் நகரசபை உறுப்பினர்கள் நீக்கப்படுகின்றனர்.
அத்தோடு கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைமைத்துவத்தினை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க முடியாது என்றும் பொதுஜன பெரமுனவினர் கூறுகின்றனர்.
கோப் , கோபா குழுக்களின் ஊடாகவே கொள்ளையர்கள் இனங்காணப்படுவார்கள். அவ்வாறான கொள்ளைகளை ஆராய்வதற்கும் பொதுஜன பெரமுனவினரே நியமிக்கப்பட வேண்டும் என்கின்றனர்.
பொதுஜன பெரமுனவின் கொள்ளையர்கள் பெயர் பட்டியலொன்றை தற்போது ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளனர். பாரிய கொள்ளையர்களின் பட்டியலே அமைச்சுப்பதவிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தூய்மையானதொரு எதிர்க்கட்சி என்ற ரீதியில் , நாட்டிலுள்ள ஒரேயொரு மாற்று அரசாங்கம் என்ற ரீதியில் இந்த கொள்ளையர்களுடன் அமைச்சரவையில் அங்கத்துவம் வகிப்பதற்கான தார்மீக உரிமை எமக்கு காணப்படுகிறதா? என்றார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM