நாளை முதல் தனியார் பேரூந்து போக்குவரத்து சேவை மட்டுப்படுத்தப்படும் - அகில இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம்

Published By: Digital Desk 4

28 Aug, 2022 | 02:11 PM
image

  (இராஜதுரை ஹஷான்)

எரிபொருள் விநியோக கட்டமைப்பில் மீண்டும் ஏற்பட்டுள்ள நெருக்கடியினால் நாளை முதல் தனியார் பேரூந்து போக்குவரத்து சேவை மட்டுப்படுத்தப்படும்.அதற்கமைய நாடுதழுவிய ரீதியில் தனியார் பேரூந்துகள் 25 சதவீதமளவில் மட்டுப்படுத்தப்படும் என  அகில இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

 தனியார் பேருந்து போக்குவரத்து சேவை தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கி.யு ஆர் முறைமைக்கு கீழ் எரிபொருள் விநியோகம் கடந்த நாட்கள் முறையாக விநியோகிக்கப்பட்டன.தற்போது மீண்டும் எரிபொருளுக்கான வரிசை தோற்றம் பெற்றுள்ளதை அவதானிக்க முடிகிறது.எரிபொருள் விநியோக கட்டமைப்பில் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் நாளை முதல் தனியார் பேருந்து போக்குவரத்து சேவை மட்டுப்படுத்தப்படும்.


அதற்கமைய இன்று முதல் 25 சதவீத பேருந்துகள் போக்குவரத்து சேவையில் ஈடுப்படுத்தப்படமாட்டாது.தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் விநியோகத்தில் முறையான நடவடிக்கையினை எடுக்குமாறு வலுசக்தி அமைச்சிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக 50 சதவீதமான தனியார் பேரூந்துகள் சேவையில் ஈடுப்படுத்தாமல் உள்ளன.பொருளாதார ரீதியில் தனியார் பேரூந்து உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.பேரூந்து உரிமையாளர்கள் மற்றும் சேவையாளர்களுக்கு மானிய அடிப்படையில் எரிபொருளை வழங்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46