கோட்டாய ராஜபக்சவிற்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் எதுவுமில்லை என அவரின் முன்னாள் சகாக்கள் உதவியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
------
மலலசேகர மாவத்தை பௌத்தாலோக மாவத்தை யில்அரச பங்களாவொன்று தயாரான நிலையில் உள்ளது
சண்டே டைம்ஸ்
செப்டம்பர் இரண்டாம் திகதி கோட்டாபயவின் கொழும்பு வருகைக்கும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவிற்கு புத்துயிர் கொடுப்பதற்கான முயற்சிகளிற்கும் தொடர்பில்லாத போதிலும் , பொதுஜனபெரமுனவிற்கு புத்துயிர் கொடுப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் சில தரப்பினர் கட்சிக்கு புத்துயிர் கொடுப்பதற்கான திட்டங்களுடன் மும்முரமாக உள்ளனர்.
கடுமையான பாதுகாப்புடன் காணப்படும் தனது வீட்டிற்கு தன்னை பார்க்க வருபவர்களிடம் பொதுஜனபெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவிற்கு புத்துயுர் கொடுப்பதற்கான சூழல் இரண்டு மூன்றுமாதங்களில் உருவாகும் என தெரிவித்து வருகின்றார்.
பொதுமக்கள் சந்திப்புகளை ஏற்பாடு செய்யவேண்டும் அதில் கட்சி சந்தித்த பின்னடைவுகள் குறித்து தெரிவிக்கவேண்டும் அவ்வாறான செயற்பாடுகள் மூலம் கட்சிக்கு புத்துயிர் கொடுப்பதற்கான நடவடிக்கைககளை முன்னெடுக்கவேண்டும் என மகிந்த ராஜபக்ச தன்னை சந்தித்த தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளார்.
சிலர் வழங்கிய தவறான ஆலோசனைகளே கட்சியின் பின்னடைவுகளிற்கு காரணம் தலைமைத்துவம் இல்லை என அவர் உறுதியாக நம்பிக்கை கொண்டுள்ளார்.
இரசாயன உர தடைக்கு தவறாக வழிநடத்தப்பட்ட சிலரின் தவறான ஆலோசனையே காரணம் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
விவசாயிகளிற்கு உண்மையை தெரிவித்தால் அவர்கள் அதனை ஏற்றுக்கொள்வார்கள் எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவே விவசாயிகளிற்கு அதிக நன்மை செய்துள்ளது என அவர் கருதுகின்றார்.
எந்த நாட்டிலும் அடைக்கலம் பெற முடியாத நிலையில் வெள்ளிக்கிழமை இலங்கை திரும்பவுள்ள கோட்டாய ராஜபக்சவிற்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் எதுவுமில்லை என அவரின் முன்னாள் சகாக்கள் உதவியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும் ஏழு வருடங்கள்அரசியலில் இருந்ததால் ( பாதுகாப்பு செயலாளராக பின்னர் ஜனாதிபதியாக ) சலனங்கள் அதிகமாக உள்ளன.
இலங்கை வரும் கோட்டாபயவிற்கு பெரும் வரவேற்பை வழங்குவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன,எனினும் பாதுகாப்பு அனுமதி குறித்த கேள்விகள் காணப்படுகின்றன.
பாதுகாப்பு கரிசனை காரணமாக கோட்டாபயவின் மிரிஹான வீட்டை விட இலகுவாக பாதுகாப்பு வழங்ககூடிய வீட்டொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மலலசேகர மாவத்தை பௌத்தாலோக மாவத்தை யில்அரச பங்களாவொன்று தயாரான நிலையில் உள்ளது,இன்னமும் அரசாங்க பங்களாவில் தங்கியிருக்கும் நாமல் ராஜபக்சவிற்கு அருகில் கோட்டாபயவிற்கான வீடு வழங்கப்பட்டுள்ளது..
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM