தலைமன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்கள் கைது

Published By: Digital Desk 4

28 Aug, 2022 | 10:33 AM
image

(மன்னார் நிருபர் எஸ்.றொசேரியன் லெம்பேட் )

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்களை நேற்று சனிக்கிழமை (27) இரவு தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்துள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

 இலங்கையின் தலைமன்னார் கடற்பரப்பில் சர்வதேச கடல் எல்லை ஊடாக இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் குறித்த   06 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்கள் பயன்படுத்திய இழுவை படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 6 பேரும் இன்று ஞாயிற்றுக்கிழமை (28) காலை தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ள நிலையில், கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51