கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 'உலகக் கிரிக்கெட் சமர்'  இன்று

Published By: Vishnu

28 Aug, 2022 | 10:13 AM
image

(நெவில் அன்தனி)

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 'உலகக் கிரிக்கெட் சமர்' என வருணிக்கப்படும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஆசிய கிண்ண (இ 20) கிரிக்கெட் போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெறவுள்ளது.

இந்த இரண்டு அணிகளும் அண்மைக் காலமாக இருதரப்பு தொடர்களில் சந்திக்காமல் இருப்பதால் ஆசிய கிண்ணம் மற்றும் சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) கிரிக்கெட் போட்டிகள் இந்த இரண்டு அணிகளுக்கு மட்டுமல்லாமல் அவற்றின் இரசிகர்களுக்கும் மிக முக்கியமானதாக அமைகிறது.

துபாயில் இந்த இரண்டு அணிகளும் மோதவுள்ள போட்டிக்கு   ஆயிரக்கணக்கான டிக்கெட்கள் சொற்ப நேரத்தில் விற்றுத் தீர்ந்ததன் மூலம் இரசிகர்கள் இந்தப் போட்டியைக் கண்டுகளிக்க எவ்வளவு மோகம் கொண்டுள்ளார்கள் என்பது புலனாகிறது.

நடப்பு சம்பியனான இந்தியாவுக்கு ஆரம்பப் போட்டியில் பாகிஸ்தானை சந்திப்பது எவ்வளவு முக்கியமோ அதேபோன்று பாகிஸ்தானுக்கும் அது முக்கியமாகும்.

இரண்டு அணிகளுக்கும் இடையில் நடைபெற்று முடிந்துள்ள 9 இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா 7 - 2 என்ற ஆட்டங்கள் கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

ஆசிய கிண்ண கிரிக்கெட் வரலாற்றிலும் 14 போட்டிகளில் இந்தியா 8 - 5 என்ற ஆட்டங்கள் அடிப்படையில் முன்னிலை வகிக்கிறது.

ஆனால், துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கல் 10 மாதங்களுக்கு முன்னர் கடைசியாக இந்த இரண்டு அணிகளுகம் கடைசியாக சந்தித்துக்கொண்ட இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை 10 விக்கெட்களால் பாகிஸ்தான் அமோக வெற்றி கொண்டிருந்ததை மறக்கலாகாது.

இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 151 ஓட்டங்களைப் பெற்றது. பாகிஸ்தான் 17.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 152 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது. சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டி ஒன்றில் விக்கெட்கள் ரீதியில் பாகிஸ்தான் ஈட்டிய மிகப் பெரிய வெற்றி இதுவாகும்.

அப் போட்டியில் அடைந்த தோல்வியை நிவர்த்தி செய்ய இந்தியா இன்றைய போட்டியில் முயற்சிக்கும் என்பது உறுதி.

இரண்டு அணிகளிலும் மிக முக்கிய நட்சத்திரங்கள் இல்லாதது பெரும் இழப்பாகும். பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஷஹீன் ஷா அப்றிடி, இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ரா ஆகிய இருவரும் உபாதை காரணமாக விளையாட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் மொஹம்மத் வசிம் உபாதைக்குள்ளானதால் அவருக்கு பதிலாக ஹசன் அலி அணியில் இணைத்தக்கொள்ளப்பட்டுள்ளதாக இரண்டு தினங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் அறிவித்தது.

எவ்வாறாயினும் இரண்டு அணிகளிலும் அதிரடி வீரர்கள் நிறைந்திருப்பதால் இந்தப் போட்டி இரசிகர்ளை பரவசத்தில் ஆழ்த்தும் என்பது உறுதி.

இந்திய அணி பெரும்பாலும் 6 துடுப்பாட்ட வீரர்கள், இரண்டு சகலதுறை வீரர்கள், 3 பந்துவீச்சாளர்களுடனும் பாகிஸ்தான் 5 துடுப்பாட்ட விரர்கள், ஒரு சகலதுறை வீரர், 4 பந்துவீச்சாளர்களுடனும் இந்தப் போட்டியை எதிர்கொள்ளும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் போட்டிக்கு முன்னர் இரண்டு அணிகளும் ஆடுகளங்களின் தன்மையை நன்கு ஆராய்ந்த பின்னர் இறுதி முடிவு எடுக்கவுள்ளன.

அணிகள் (பெரும்பாலும்)

இந்தியா: ரோஹித் ஷர்மா (தலைவர்), கே.எல். ராகுல், விராத் கோஹ்லி, சூரியகுமார் யாதவ், ரிஷாப் பன்ட், ஹார்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ரவிந்த்ர ஜடேஜா, யுஸ்வேந்த்ர சஹல், புவ்ணேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங்.

பாகிஸ்தான்: பாபர் அஸாம் (அணித் தலைவர்), மொஹம்மத் ரிஸ்வான், பக்கார் ஸமான், இப்திகார் அஹ்மத், குஷ்தில் ஷா, ஆசிப் அலி, ஷதாப் கான், உஸ்மான் காதிர், ஹரிஸ் ரவூப், ஷாநவாஸ் தஹானி, மொஹம்மத் ஹஸ்நய்ன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரான்ஸை எளிதாக வெளியேற்றிய ஸ்பெய்ன் உலகக்...

2026-07-15 09:45:43
news-image

ஐரோப்பிய பலவான்கள் பிரான்ஸ் - ஸ்பெய்ன்...

2026-07-14 21:51:19
news-image

சாத்தியமான நான்கு உலகக் கிண்ண இறுதிப்...

2026-07-14 20:47:02
news-image

லங்கா பிறீமியர் லீக் 2026 போட்டிகளை...

2026-07-14 13:40:15
news-image

செவிப்புலன் குறைபாடுடையோருக்கான T20 தொடர்: இலங்கையை...

2026-07-14 05:10:23
news-image

லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது மகளிர்...

2026-07-13 20:58:58
news-image

இந்தியாவுடனான  இளையோர் டெஸ்ட் கிரிக்கெட்: சேனுஜ...

2026-07-13 21:08:28
news-image

விம்பின்டன் ஒற்றையர் சம்பியன் பட்டங்களை லிண்டா,...

2026-07-13 16:14:05
news-image

ஆடவர் 400 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில்...

2026-07-13 15:30:10
news-image

சுப்பர் லீக் கால்பந்தாட்டம் கோலாகலமாக தொடங்கியது...

2026-07-13 10:21:23
news-image

சுவிட்ஸர்லாந்தின் கடும் சவாலை மேலதிக நேரத்தில்...

2026-07-12 15:03:27
news-image

பெலிங்ஹாமின் இரட்டை கோல்களுடன் நோர்வேயை வென்று...

2026-07-12 14:17:29