ஜேர்மன், நோர்வே, டென்மார்க் நாடுகள் சாதக சமிக்ஞை - சுமந்திரன் கூறுகின்றார்

28 Aug, 2022 | 07:14 AM
image

(ஆர்.ராம்)

ஜேர்மன், நோர்வே, டென்மார்க் உட்பட சுவீடன், பின்லாந்து உள்ளிட்ட நாடுகளின் முக்கியமான பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில் தமிழ் மக்களுக்கு சாதகமான சமிக்ஞை வெளியிடப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அண்மையில், மேற்படி நாடுகளுக்கு விஜயம் செய்திருந்த அவர் அங்கு நடைபெற்ற சந்திப்புக்கள் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மைய பயணத்தில் முதலில் ஜேர்மன் நாட்டிற்கே எனது விஜயம் அமைந்திருந்தது. ஜேர்மன் நோக்கிச் செல்வதற்கு மூன்று காரணங்கள் பிரதானமாக இருந்ததோடு அந்நாடு இலங்கையின் விடயத்தில் முக்கியத்துவத்துமானதாகவும் உள்ளது.

ஜேர்மானானது, ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் பிரதான நாடாக உள்ளதோடுரூபவ் சர்வதேச நாணய நிதியத்திலும் வகிபாகத்தினைக் கொண்டிருக்கின்றது.

அத்துடன், ஐ.நா.வில் இலங்கை பற்றிக் கொண்டுவரப்படவுள்ள பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கும் நாடாகவும் உள்ளது.

அந்தவகையில் அந்நாட்டுக்கு நிலைமைகள் பற்றிய தெளிவுபடுத்தல்களையும் அடுத்தக்கட்டச் செயற்பாடுகள் பற்றிய கோரிக்கைகளையும் முன்வைக்க வேண்டியது கட்டாயமானதாகும்.

அதன்பிரகாரம்ரூபவ் அங்கு விஜயம் செய்திருந்த நான், ஜேர்மன் அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸின் வெளிவிவகாரங்களுக்கான செயலாளர் இயன்ஸ் ஸ்பொட்னருடன் சந்திப்பொன்றை நடத்தினேன். இவர் இலங்கைக்கான ஜேர்மனின் தூதுவராகவும் செயற்பட்டவர் என்பது முக்கியமானதாகும்.

அதன்தொடர்ச்சியாக நோர்வேக்குச் சென்று, நோர்வேயின் வெளிவிவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் துரே ஹைட்ரமுடன் சந்திப்பை நடத்தினேன். போர் நடைபெற்ற காலப்பகுதியில் இவர் இலங்கைக்கான நேர்வேயின் தூதுவராக இருந்தவர்.

தொடர்ந்து, டென்மார்க், பின்லாந்து, சுவீடன் உள்ளிட்ட நாடுகளுக்கு விஜயம் செய்ததோடு அங்கும் வெளிவிவாகாரத்துறையின் பல்வேறு பிரதிநிதிகளையும் சந்தித்து உரையாடியிருந்தேன்.

இந்தநாடுகளின் பிரதிநிதிகளுடனான உரையாடல்களின்போதுரூபவ் அடுத்து வரும் ஐ.நா.மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கொண்டுவரப்படவுள்ள இலங்கையின் பொறுப்புக்கூறல் பற்றிய பிரேரணை குறித்து கவனம் செலுத்தப்பட்டது. 

அத்துடன், தமிழ் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாகவுள்ள அரசியல் தீர்வுக் கோரிக்கை மற்றும்ரூபவ் அற்கான அவசியம் குறித்து தெளிவு படுத்தப்பட்டதோடு, அரசியல் தீர்வொன்றை வழங்கும் பட்சத்தில் முதலீடுகளைச் செய்வதற்கான ஏதுநிலைகள் பற்றியும் கரிசனை கொள்ளப்பட்டது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் நல்லிணக்க பொறிமுறை பாதிக்கப்பட்ட சமூகங்களின்...

2024-05-29 10:11:30
news-image

உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2024-05-29 10:10:35
news-image

மாணவியின் ஆபாச புகைப்படங்களை சமூக ஊடகங்களில்...

2024-05-29 10:11:29
news-image

கற்பிட்டியில் திமிங்கல வாந்தியுடன் இரு மீனவர்கள்...

2024-05-29 10:07:37
news-image

வடக்கு ரயில் பாதை அபிவிருத்தி பணிகள்...

2024-05-29 09:23:19
news-image

உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும்...

2024-05-29 09:19:38
news-image

இன்றைய வானிலை

2024-05-29 06:14:11
news-image

ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் பிற்போடும்...

2024-05-29 05:45:55
news-image

பட்டமளிப்பு விழாவை பிற்போடுவது இளங்கலை மாணவர்களின்...

2024-05-29 01:44:39
news-image

கண்டியில் பிரபல வர்த்தகர் ஒருவர் 20...

2024-05-29 01:41:06
news-image

வவுனியாவில் 80 போதை மாத்திரைகளுடன் 20...

2024-05-29 01:29:28
news-image

55 வயது நிறைவடைந்த அனைத்து தொழிலாளர்களுக்கும்...

2024-05-29 01:25:16