ஆர்ப்பாட்டக்காரர்களை வேட்டையாடும், ஊடக சுதந்திரத்தை முடக்கும் அரசிற்கு எவ்வாறு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு கிடைக்கும் ? - சஜித்

Published By: Digital Desk 3

27 Aug, 2022 | 03:41 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி கூறுகின்றார்.

ஒரு புறம் ஆர்ப்பாட்டக்காரர்களை வேட்டையாடிக் கொண்டு, மறுபுறம் ஊடகங்களுக்கு எதிரான அடக்குமுறைகளைப் பிரயோகித்துக் கொண்டிருக்கும் அரசாங்கத்திற்கு சர்வதேசத்தின் உதவிகள் கிடைக்கப் பெறுவது சந்தேகத்திற்குரியது என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,  

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் மக்களுக்காக போராட்டங்களில் ஈடுபட்டவர்களை வேட்டையாடிக் கொண்டிருக்கும் அதே வேளை, மறுபுறம் ஊடகங்களுக்கு எதிராக அடக்குமுறைகளையும் பிரயோகித்துக் கொண்டிருக்கிறது. 

நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி கூறுகின்றார்.

நாட்டு மக்களுக்காக போராடிய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக அடக்குமுறைகளைப் பிரயோகித்துக் கொண்டு எவ்வாறு சர்வதேசத்தின் ஒத்துழைப்பினைப் பெற்றுக் கொள்ள முடியும்? சர்வதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் இலங்கையில் ஊடக சுதந்திரத்தையும், அடிப்படை மனித உரிமை மீறல்களையும் உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளனர்.

இவ்வாறான சூழலில் எமக்கு சர்வதேசத்தின் உதவிகள் கிடைக்கப் பெறுமா, இல்லையா என்பது சந்தேகத்திற்குரியதே. தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் நகைப்பிற்குரிய வகையிலேயே செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. 

சிறு பிள்ளைகள் கூட செயற்படாத வகையிலேயே அரசாங்கத்தின் செயற்பாடுகள் காணப்படுகின்றன. நாட்டைப் பற்றி சிந்தித்து செய்பட வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கு காணப்படுகிறது.

பக்க சார்பற்ற ஊடகங்களால் முன்னெடுக்கப்படும் விமர்சனங்களை தவறாக புரிந்து கொள்ளாமல் , தமது செயற்பாடுகளை அரசாங்கம் மாற்றிக் கொள்ள வேண்டும். மாறாக அந்த விமர்சனங்களை கோபத்துடன் பார்க்கக் கூடாது. 

ராஜபக்ஷாக்களுக்கு எதிராக செயற்படுகின்ற பொது மக்களுக்கு துன்புறுத்தல்களை ஏற்படுத்தும் செயற்பாடுகளையே அரசாங்கம் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது.

அரசாங்கத்தின் நிலைப்பாடு ராஜபக்ஷாக்களை பாதுகாப்பதா? இதற்காகவா புதிய ஜனாதிபதி தலைமையில் அரசாங்கமொன்று தோற்றம் பெற்றது? ஊடகங்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு இடமளிக்க முடியாது. 

பக்க சார்பின்றி அரசாங்கத்திற்கு எதிரான ஊடக நிறுவனங்களை முடங்கச் செய்வதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். மக்களுக்குள்ள அடிப்படை உரிமைகளை மீறும் அதிகாரம் அரசாங்கத்திற்கு கிடையாது.

ஊடக நிறுவனங்களின் பிரதானிகள் சீ.ஐ.டி.க்கு அழைக்கப்படுகின்றனர். ஆனால் வன்முறைகளின் போது தாக்குதல்களுக்குள்ளான ஊடகவியலாளர்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. 

இதற்கான காரணம் என்ன? அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய காலம் உதயமாகியுள்ளது. அதற்கு தலைமை வகிப்பதற்கு நாம் தயாராக உள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08